பென்ச் புலிகள் காப்பகத்தின் ராணி – ‘காலர்வாலி’ பெண் புலி மரணம்
மத்திய பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள பென்ச் புலிகள் காப்பகத்தின் ராணி என சொல்லப்பட்டு வந்த ‘காலர்வாலி’ என்ற பெண் புலி உயிரிழந்துள்ளது. 16 வயதான அந்த புலி தனது வாழ்நாளில் மொத்தம் 29 குட்டிகளை ஈன்றது. அதில் 25 குட்டிகள் உயிருடன் தற்போது வாழ்ந்து வருகின்றன. அதனால் பென்ச் புலிகள் காப்பகத்தின் ‘சூப்பர் மம்மி’ எனவும் காலர்வாலி போற்றப்பட்டது. புலிகள் பாதுகாப்புத் திட்டத்தில் அதன் எண்ணிக்கையை பெருக்க உதவிய புலிகளில் காலர்வாலியின் பங்கும் கொஞ்சம் அதிகம். T15…