தஞ்சாவூரில் பைக்கை திருடி, புதுக்கோட்டையில் செயின் பறிப்பு! – இளைஞர்கள் சிக்கியது எப்படி?
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாகவே நகர்ப் பகுதிகளிலும், அரிமளம், திருமயம் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் செயின் பறிப்புச் சம்பவங்கள் அதிகரித்து வந்தது. செயின் பறிப்பைத் தடுக்கும் வகையில், மாவட்ட போலீஸார் செயின்பறிப்பு வழக்குகளைத் துரிதமாக விசாரிப்பதுடன், வாகன தணிக்கைகளையும் தீவிரப்படுத்தியிருந்தனர். இதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை அருகே பொற்பனைக்கோட்டை பகுதியில் கணேஷ் நகர் இன்ஸ்பெக்டர் முகமது ஜாபர் தலைமையிலான போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்தின் பேரில் வந்த இருவரை மடக்கிப் பிடித்து…