சிபிஐ புதிய இயக்குனராக சுபோத் குமார் ஜெய்ஸ்வால் நியமனம்
சிபிஐ புதிய இயக்குனராக சுபோத் குமார் ஜெய்ஸ்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சி.பி.ஐ. இயக்குனர் பதவி கடந்த 3 மாதங்களாக காலியாக இருக்கிறது. சிபிஐ இயக்குனராக இருந்த ரிஷிகுமார் சுக்லா ஓய்வுபெற்ற பின் அந்தப் பதவிக்கு யாரும் நியமிக்கப்படாமல் இருந்தது. கூடுதல் இயக்குனர் பிரவீன் சின்ஹா கூடுதல் பொறுப்பாக அந்தப் பதவியை தற்போது வகித்து வருகிறார். இதற்கிடையே, புதிய சி.பி.ஐ. இயக்குனரை தேர்ந்தெடுப்பதற்காக பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா…