‘தள்ளிப்போகும் தேதி’ – SIR படிவத்தை சமர்ப்பிக்கும் தேதி நீட்டிப்பு; அவசரம் வேண்டாம் மக்களே

பெரும்பாலானோர் SIR படிவத்தை நிரப்பிக் கொடுத்திருப்பீர்கள். இன்னும் சிலர் சில சந்தேகங்களால் எஸ்.ஐ.ஆர் படிவத்தைக் கொடுக்காமல் வைத்திருக்கலாம்.

இன்னும் 4 நாள்கள் தானே உள்ளது என்கிற அவசரம் இனி உங்களுக்கு வேண்டாம்.

தேர்தல் ஆணையம் எஸ்.ஐ.ஆர் படிவம் சமர்ப்பிப்பதற்கான தேதியை தற்போது நீட்டித்துள்ளது.

தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்

தேதி மாற்றம் விவரம்

எஸ்.ஐ.ஆர் படிவம் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி: டிசம்பர் 11, 2025

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு தேதி: டிசம்பர் 16, 2025

ஆட்சேபனை மற்றும் மேல்முறையீட்டு தேதி: டிசம்பர் 16, 2025 – ஜனவரி 15, 2026

தேர்தல் ஆணையம் ஆட்சேபனை மற்றும் மேல்முறையீடுகளை சரிபார்க்கும் தேதி: டிசம்பர் 16, 2025 – பிப்ரவரி 7, 2026

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு – பிப்ரவரி 14, 2026

எஸ்.ஐ.ஆர் படிவத்தில் சந்தேகமா?

ஏதேனும் சந்தேகம் இருந்தால், வாக்குச்சாவடி அலுவலர்களிடம் கேட்டுத் தெளிவாக எஸ்.ஐ.ஆர் படிவத்தை எந்தக் குளறுபடியும் இன்றி நிரப்புங்கள்.

இந்தப் படிவம் தான் உங்களுடைய வாக்குரிமையை உறுதி செய்யும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.