டிட்வா: “அவர்கள் மீண்டெழுந்திட துணை நிற்போம்” – இலங்கை பாதிப்பு குறித்து ஸ்டாலின்

வங்கக்கடலில் உருவான ‘டிட்வா’ புயல் இலங்கையைப் புரட்டி போட்டிருக்கிறது.

கனமழை, வெள்ளம், நிலச்சரிவு காரணமாக இதுவரை 130க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து தற்காலிக முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

இலங்கையில் 'டிட்வா' புயல் பாதிப்பு
இலங்கையில் ‘டிட்வா’ புயல் பாதிப்பு;

நிலைமையை சமாளிக்க ‘ஆபரேஷன் சாகர் பந்து’ மூலம் நிவாரணப் பொருட்களை இந்தியா அனுப்பி வைத்திருக்கிறது.

இந்நிலையில் இலங்கை மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிட தமிழ்நாடு அரசு தயாராக இருப்பதாக ஸ்டாலின் தனது எக்ஸ் தளபக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ” ‘டிட்வா’ புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்குத் துணை நிற்கத் தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது.

இந்த இயற்கைச் சீற்றத்தால் உயிரிழந்த மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இலங்கையில் ‘டிட்வா’ புயல் பாதிப்பு;

துயருறும் அந்த மக்களுக்கு உணவுப் பொருட்கள் – மருந்துப் பொருட்கள் என ஒன்றிய அரசு மூலம் உதவிக்கரம் நீட்டிட அதிகாரிகள் குழுவை அமைக்கிறோம்.

அவர்கள் மீண்டெழுந்திட துணை நிற்போம்” என்று பதிவிட்டிருக்கிறார்.