Bihar Election Results Live: அலி நகர் தொகுதியில் பாடகி மைதிலி முன்னிலையில் – பீகார் தேர்தல் முன்னணி நிலவரம்!

பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகள்… முன்னணி நிலவரம்!

8:55 மணி நிலவரப்படி …

பிரதமர் மோடி – அமித் ஷா

38 மாவட்டங்களில் 46 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடந்துவரும் நிலையில், பாஜக 29 இடங்களிலும், ஜேடியு 18 இடங்களிலும், ஆர்ஜேடி 32 இடங்களிலும், காங்கிரஸ் 7 இடங்களிலும் முன்னிலை வகித்தன.

காலை 8:55 மணி நிலவரப்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணி 85 இடங்களிலும், மகாகட்பந்தன் 57 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

என்.டி.ஏ முன்னிலை

நிதிஷ் குமார், மோடி

ஆரம்ப வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில், நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. தேஜஸ்வி யாதவின் மகா கூட்டணி பின்தங்கியுள்ளது. வைஷாலி மாவட்டத்தில் உள்ள தனது குடும்ப கோட்டையான ரகோபூரில் தேஜஸ்வி முன்னிலை வகிக்கிறார். அதே நேரத்தில் தேஜஸ்வியிடமிருந்து பிரிந்து கட்சி தொடங்கிய அவரின் சகோதரரும் ஜே.ஜே.டி தலைவருமான தேஜ் பிரதாப் யாதவ் மஹுவா தொகுதியில் முன்னிலை வகிக்கிறார்.

முன்னிலை நிலவரம்!

பீகார் சட்டமன்றத் தேர்தல் 2025
பீகார் சட்டமன்றத் தேர்தல் 2025

என்.டி.ஏ கூட்டணி : 78

இந்தியா கூட்டணி (மகா) : 55

ஜன் சூரஜ் : 4

மற்றவை : 2

பாடகி மைதிலி முன்னிலை

பாடகி மைதிலி தாக்கூர்
பாடகி மைதிலி தாக்கூர்

தபால் வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து முன்னிலை வகிக்கும் என்.டி.ஏ கூட்டணி.

அலிநகரில் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் பாடகி மைதிலி தாக்கூர் முன்னிலை வகிக்கிறார்.

தொடர்ந்து முன்னிலையில் தேஜ்ஸ்வி!

ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் (Tejashwi Yadav)
தேஜஸ்வி யாதவ் (Tejashwi Yadav)

மகாபந்தன் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் ரகோபூர் தொகுதியில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார்.

முன்னிலை நிலவரம்: 

என்.டி.ஏ கூட்டணி : 29

இந்தியா கூட்டணி (மகா) : 17

ஜன் சூரஜ் : 3

மற்றவை : 3

தொடங்கியது வாக்கு எண்ணிக்கை!

பீகார் சட்டமன்றத் தேர்தல்
பீகார் சட்டமன்றத் தேர்தல்

பீகார் சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தொடங்கிவிட்டது. 38 மாவட்டங்களில் உள்ள 243 தொகுதிகளின் வெற்றித் தோல்விகளை தீர்மானிக்கும் தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில், முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

இது தவிர இன்று ஆறு மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள எட்டு தொகுதிகளில் நடந்த சட்டமன்ற இடைத்தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கையும் தொடங்கியுள்ளது.

`200-க்கும் மேற்பட்ட இடங்கள் கிடைக்கும்’ – பீகார் அமைச்சர் நிதின் நபின்

பீகார் அமைச்சரும் பங்கிபூர் தொகுதி பா.ஜ.க வேட்பாளருமான நிதின் நபின் “ இந்த முறை தேசிய ஜனநாயக கூட்டணியின் தொகுதி எண்ணிக்கை 2010 தேர்தலை விட அதிகமாக இருக்கும் என்று நாங்கள் அனைவரும் நம்பிக்கையுடன் இருக்கிறோம். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கப் போகிறது… எங்களுக்கு 200-க்கும் மேற்பட்ட இடங்கள் கிடைக்கும்… அவர்களால் [ராஷ்டிரிய ஜனதா தளம்] இன்னும் ‘காட்டு ராஜ்ஜியம்’ என்ற மனநிலையை விட்டுக்கொடுக்க முடியவில்லை. ஆர்ஜேடி ‘காட்டு ராஜ்ஜியத்தின்’ சின்னம்.” – எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

தேஜஸ்வி நவம்பர் 18-ம் தேதி பதவியேற்பார்! – மிருத்யுஞ்சய் திவாரி

மிருத்யுஞ்சய் திவாரி
மிருத்யுஞ்சய் திவாரி

“தேர்தலுக்குப் பிந்தைய ஊகங்கள் எதுவாக இருந்தாலும், முடிவுகள் எங்களுக்கு சாதகமாக இருக்கும். நிதிஷ் குமாரின் அரசு நிச்சயம் வெளியேறப் போகிறது. மகாபந்தன் கூட்டணி ஆட்சி அமைக்கும். நாங்கள் விழிப்புடன் இருக்கிறோம், எல்லா இடங்களிலும் ஒரு கண் வைத்திருக்கிறோம், பீகாரின் எதிர்காலத்தைப் பாதுகாக்க, மக்கள் தேஜஸ்வி யாதவை ஆசீர்வதித்துள்ளனர். நிதிஷ் குமார் அரசின் முடிவுக்கு சில மணிநேரங்கள் மட்டுமே உள்ளது. அவர்களின் வெளியேற்றம் உறுதி. மக்கள் காத்திருந்த தருணம் வந்துவிட்டது… தேஜஸ்வி நவம்பர் 18-ம் தேதி பதவியேற்பார்.” – ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி) செய்தித் தொடர்பாளர் மிருத்யுஞ்சய் திவாரி,

பீகார் சட்டமன்றத் தேர்தலின் இரண்டு கட்ட (நவம்பர் 6, 11) வாக்குப்பதிவுகளும் முடிந்துவிட்டது. முதற்கட்ட வாக்குப்பதிவில் 65.08 சதவிகிதமும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் 68.76 சதவிகிதமும் என மொத்தமாக 66.91 சதவிகித வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. பீகார் தேர்தல் வரலாற்றில் அதிகளவில் பதிவான வாக்கு சதவிகிதம் இதுதான்.

2005-க்குப் பிறகு சுமார் 20 வருடங்களாக எந்தக் கூட்டணி ஆட்சிக்கு வந்தாலும், அந்தக் கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் குறைவான இடங்களைக் கொண்டிருந்தாலும் நிதிஷ் குமார்தான் முதல்வராக இருப்பதால் இம்முறை மாற்றம் வருமா என்ற எதிர்பார்ப்பை இத்தேர்தல் உருவாக்கியிருக்கிறது.

பீகார் சட்டமன்றத் தேர்தல் 2025
Bihar Assembly Election 2025

ஆனால், கருத்துக்கணிப்பு முடிவுகள் அனைத்திலும் நிதிஷ் குமார் அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சுமார் 140 இடங்களுடன் ஆட்சியமைக்கும் என்று கூறப்பட்டிருக்கின்றன.

மறுபக்கம், “கருத்துக்கணிப்பு முடிவுகள் எல்லாம் ஒரு உளவியல் அழுத்தம். மாற்றம் உறுதி, 18-ம் தேதி பதவியேற்பு விழா நடைபெறும்” என்று நம்பிக்கையோடு இருக்கிறார் மகாபந்தன் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவ்.

நிதிஷ் குமார் - தேஜஸ்வி யாதவ்
நிதிஷ் குமார் – தேஜஸ்வி யாதவ்

இதற்கிடையில், ஜன் சுராஜ் என்ற தனிக்கட்சி தொடங்கித் தனித்துக் களமிறங்கிய பிரசாந்த் கிஷோர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப்போவதில்லை ஓரிரு இடங்களில் தான் அவரின் கட்சி வெல்லும் என்றும் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இவையனைத்துக்கும் மக்களின் அதிகாரப்பூர்வ பதில் இன்று தெரியும். பீகார் சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை முடிவுகளை நேரலையாக உடனுக்குடன் தெரிந்துகொள்ள இப்பக்கத்தில் இணைந்திருங்கள்.