வெளியூரில் வேலை; SIR படிவம் வீட்டிற்கு வந்துவிட்டது! என்னுடைய கையெழுத்து தேவையா? | Q&A

சிறப்பு தீவிர திருத்த விண்ணப்பம் இப்போது தமிழ்நாட்டின் பெரும்பாலான வீடுகளுக்கு வந்துவிட்டது.

சிலருக்கு வாக்குரிமை சொந்த ஊரில் இருக்கும். ஆனால், அவர்கள் பணி நிமித்தமாகவோ, பிற காரணங்களுக்காகவோ வெளியூரிலோ, வெளி மாநிலத்திலோ, வெளிநாட்டிலோ இருக்கலாம். அவர்கள் இந்த விண்ணப்பத்தை என்ன செய்வது என்கிற கேள்வி எழும். அதற்கான பதில் தான் இது.

உங்கள் வீட்டில் உங்களுக்காக தற்போது கொடுக்கப்பட்டிருக்கும் SIR விண்ணப்பத்தில் ஏற்கெனவே பெயர், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை எண், முகவரி, சட்டமன்றத் தொகுதி பெயர், பகுதி எண் மற்றும் வரிசை எண், புகைப்படம் ஆகியவை இடம்பெற்றிருக்கும்.

SIR - சிறப்பு தீவிர திருத்தம்
SIR – சிறப்பு தீவிர திருத்தம்

அந்த விண்ணப்பத்தில் பிறந்த தேதி, ஆதார் எண் (விருப்பமிருந்தால் மட்டும்), மொபைல் எண், தந்தை, தாய், கணவர் அல்லது மனைவி பெயர் மற்றும் அவர்களுக்கு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை எண் ஆகியவை கேட்கப்பட்டிருக்கும்.

அடுத்ததாக, 2002-ம் ஆண்டு அல்லது 2005-ம் ஆண்டு சிறப்பு தீவிர திருத்த வாக்காளர் பட்டியலில் இருந்தால், அந்தப் பட்டியலில் உள்ள விவரங்களை தேவையின் படி பூர்த்தி செய்ய கேட்கப்பட்டிருக்கும்.

கையெழுத்து யார் போடலாம்?

ஒருவேளை, அந்தத் தீவிர திருத்தப் பட்டியலில், நமது பெயர் இல்லாவிட்டால், உங்களது தந்தை, தாய், தாத்தா அல்லது பாட்டி ஆகியோரின் பெயர்கள் அந்தப் பட்டியலில் இருந்தால், அவர்களின் விவரங்களை நிரப்பலாம்.

தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்

இந்த விவரங்களை எல்லாம் நீங்கள் தான் நிரப்ப வேண்டும் என்பதில்லை. உங்கள் சார்பாக உங்கள் வீட்டில் இருப்பவர்களே செய்யலாம். ஒருவேளை,விண்ணப்பத்தில் கேட்கப்பட்டிருக்கும் சில தகவல்கள் தெரியவில்லை என்றால் பூத் லெவல் ஆபீசரின் உதவியை நாடலாம்.

பின்னர், முழுமையாக விண்ணப்பத்தை பூர்த்தி செய்த பின், 18 வயது நிரம்பிய உங்களுடைய ஏதேனும் ஒரு குடும்ப உறுப்பினர் உங்கள் சார்பாக விண்ணப்பத்தில் கையெழுத்திட்டு அல்லது இடது பெருவிரல் கைரேகைவிட்டு வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் கொடுத்துவிட்டால், அதுவே போதும்.