பாமக: “திமுக தேர்தல் நேரத்துல இறங்கி வேலை செய்றாங்க, ஆனா நம்ம?” – நிர்வாகிகள் கூட்டத்தில் அன்புமணி

சென்னையில் இன்று (நவ.12) பாமக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய அன்புமணி, ” தேர்தல் ஆணையம் என்னை அங்கீகாரம் செய்துவிட்டார்கள்.

மாம்பழம் சின்னத்தை நமக்கு தான் தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது. அதை ஒன்றும் செய்ய முடியாது.

நீதிமன்றம் சென்றாலும் ஒன்றும் நடக்காது. அய்யாவை (ராமதாஸை) அங்கு உள்ளவர்கள் கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்” என்றிருக்கிறார்.

அன்புமணி, ராமதாஸ்
அன்புமணி, ராமதாஸ்

தொடர்ந்து பேசிய அவர், ” தேர்தல் நேரத்தில் திமுகவினர் பூத்தில் இறங்கி வேலை பார்ப்பார்கள். எதில் கவனம் செலுத்த வேண்டுமோ அதில் கவனம் செலுத்துகிறார்கள்.

நாம் தேர்தலுக்கு முன்பு வரை களத்தில் இறங்கி போராடுவோம். அவ்வளவு உழைப்பை நாம் போடுவோம். ஆனால் அவர்கள் பூத் கமிட்டியில் கவனம் செலுத்தி ஜெயிக்கிறார்கள்.

இதை நாம் சரி செய்துவிட்டால் நாம் தான் ஆளுங்கட்சி. நிறைய விஷயங்களை நிர்வாகிகள் ஆகிய நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். இன்னும் 5 மாதத்தில் நீங்கள் எல்லோரும் அமைச்சர்களாகப் போகிறீர்கள்” என்று பேசியிருக்கிறார்.