வங்கி, போஸ்ட் ஆபீஸ், அரசு அலுவலகங்கள்… – இனி போகுமிடமெல்லாம் ஆதார் கார்டை தூக்கிச் செல்லும் வேலை இருக்காது.
இதற்கு பதிலாக, UIDAI அறிமுகம் செய்துள்ள ‘ஆதார்’ என்கிற ஒற்றை ஆப் போதும்.
இந்த ஆப் மூலம் உங்களுக்கு ஆதார் வேண்டுகிற இடத்தில் ஷேர் செய்துகொள்ளலாம் அல்லது பிரிண்ட் கூட எடுத்துக் கொள்ளலாம். இதற்கு இந்த ஆப்பில் இருக்கும் கியூ.ஆர் கோடே போதுமானது.
உங்கள் பெயர் மற்றும் ஆதார் எண் அல்லது முழு ஆதார் தகவல் எனத் தேர்ந்தெடுத்து இந்த ஆப் மூலம் உங்கள் ஆதாரை ஷேர் செய்ய முடியும். இது தான் இந்த ஆப்பின் முக்கிய சிறப்பம்சம்.
இந்த ஆப்பில் உங்களது ஆதார் மட்டுமல்ல, உங்களுடைய குடும்ப உறுப்பினர்களின் ஆதாரையும் பதிவு செய்து வைத்துக்கொள்ள முடியும்.

இந்த ஆப்பை எப்படிப் பயன்படுத்துவது என்பதைப் பார்க்கலாம் வாங்க…
ஆன்ட்ராய்ட் மொபைல் வைத்திருப்பவர்கள் இந்த லிங்கிலும், ஆப்பிள் போன் வைத்திருப்பவர்கள் இந்த லிங்கிலும் ‘ஆதார்’ ஆப்பை டௌன்லோடு செய்துகொள்ளலாம்.
இந்த ஆப்பை இன்ஸ்டால் செய்த உடன் ஒரு சில அனுமதிகளை கேட்கிறது. அவற்றை படித்துப் பார்த்து ‘Allow’ கொடுக்கவும்.
பின்னர், உங்களது ஆதார் எண் கொடுத்து லாகின் செய்துகொள்ளவும். அதன் பின், கொடுக்கப்படும் ‘டேர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்களை‘ படித்து டிக் செய்யவும்.
பின்னர், உங்கள் சிம் கார்டை Verify செய்துகொள்ளவும். இதில் நீங்கள் ஆதாரை இணைத்திருக்கும் மொபைல் எண்ணில் verify கொடுக்கவும்.
அடுத்ததாக, ‘Face Aunthetication‘ கேட்கப்படுகிறது. அதற்கு உங்கள் முகத்தை ஸ்கீரினில் தெரியும் வட்டத்தில் வருமாறு பார்த்துக்கொள்ளவும். அந்த வட்டத்தின் அவுட்லைன் பச்சை ஆனதும், கண்ணை சிமிட்டினால், உங்களுடைய Face Aunthetication ரெடி.
பின்னர், இந்த ஆப்பிற்கான 6 எண் கொண்ட புது பின் நம்பரை செட் செய்யவும்.

இதன் பின், ஓப்பன் ஆகும் பக்கத்தில், உங்கள் மொத்த ஆதார் தகவலும் ரெடியாக இருக்கும்.
இந்தப் பக்கத்தில் இருக்கும் கியூ.ஆர் கோடை தட்டினால், உங்களது மொத்த ஆதார் தகவலும் தெரியும்.
கியூ.ஆர் கோடின் கீழ் இருக்கும் ‘Share ID‘-ஐ கிளிக் செய்தால், ‘Selective Share‘, ‘Complete Share‘, ‘Download Aadhar‘ ஆகிய ஆப்ஷன்களை காட்டும். இதில் உங்களுக்கு எது தேவையோ, அதை கிளிக் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். டௌன்லோடு ஆதார் கொடுத்து பிரிண்ட் எடுத்துகொள்ளலாம்.
‘Scan QR‘ ஆப்ஷனில் ஸ்கேன் செய்தால், நீங்கள் ஸ்கேன் செய்யும் ஆதாரின் தகவல்கள் இந்த ஆப்பிற்கு வந்துவிடும்.
முகப்பு பக்கத்தில் இருக்கும் கியூ.ஆர் கோடை தட்டினால், உங்களுடைய தகவல்கள் வரும். அதற்கு கீழ் இருக்கும் ‘Mask Data‘-வை கிளிக் செய்தால், உங்களுடைய ஆதார் எண் மறைந்துவிடும். யாரிமாவது உங்கள் ஆதார் கார்டை காட்ட வேண்டும்… ஆனால், ஆதார் எண்ணை காட்ட வேண்டாம் என்றால் இந்த ஆப்ஷனை பயன்படுத்தி கொள்ளலாம்.
அடுத்ததாக இருக்கும் ‘Bio Lock‘ ஆப்ஷனை தட்டினால், உங்களுடைய கைரேகை, கருவிழி, முகம் பற்றி தகவல்கள் மறைந்துவிடும்.
முகப்பு பக்கத்தில் கீழ் இருக்கும் ‘Recent Transaction‘-ஐ கிளிக் செய்தால், நீங்கள் சமீபத்தில் ஆதார் கார்டு எங்கெல்லாம் பயன்படுத்தி இருக்கிறீர்கள் என்பதை தெரிந்துகொள்ளலாம்.
இதற்கு கீழ் இருக்கும் ‘Privacy and Security‘-ல் உங்களுடைய பின் நம்பரை எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்.
முகப்பு பக்கத்தில், உங்களுடைய பெயருக்கு கீழ் இருக்கும் சின்ன அம்புக்குறியைத் தொட்டால் ‘Add Another Profile‘ என்கிற ஆப்ஷனைக் காட்டும். அதில் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் தகவலை சேர்த்துக்கொள்ளலாம். இதில் 5 நபர்களின் தகவல்கள் வரை சேர்த்துகொள்ளலாம்.
