டெல்லி கார் வெடிப்பு: `என் மகன் தான்’ டாட்டூவால் அடையாளம் – கண்ணீர் சிந்தும் தந்தை

தலைநகர் டெல்லி செங்கோட்டை அருகே நேற்று ( நவம்பர். 10) கார் வெடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி டெல்லி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தால் 10 பேர் உயிரிழந்திருக்கின்றனர். பலர் படுகாயமடைந்திருக்கின்றனர்.

டெல்லி செங்கோட்டைக்கு அருகே கார் வெடித்த சம்பவம்
டெல்லி

இந்த கார் வெடிப்பு சம்பவத்தில் இறந்தவர்களின் சிதலமைடைந்த உடலை வைத்து உறவினர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் சிரமமாக இருந்த நிலையில் தொழிலதிபர் ஒருவரின் உறவினரை கையில் போடப்பட்டிருக்கும் டாட்டூக்களை வைத்து மருத்துவர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர்.

இறந்த தொழிலதிபர் அமர் கட்டாரியாவின் தந்தை இந்த சம்பவம் தொடர்பாக ‘India Today’-விற்கு பேட்டி அளித்திருக்கிறார்.

” மருத்துவமனையில் இருந்து எனக்கு அதிகாலை அழைப்பு வந்தது.

‘இறந்தவரின் கையில் ‘Mom my first love’, ‘Dad my strength’, ‘Kriti’ என்ற டாட்டூ போட்டிருக்கிறார்.

உங்களால் அடையாளம் காண முடியுமா?’ என கேட்டனர். நான் கண்ணீருடன் என் மகன் தான் என்று உறுதி செய்தேன்.

டெல்லி செங்கோட்டைக்கு அருகே கார் வெடித்த சம்பவம்
டெல்லி கார் வெடிப்பு

அன்றிரவு மகனுடன் சேர்ந்து இரவு உணவுக்குச் செல்ல இருந்தோம். அதற்குள் இப்படி ஆகிவிட்டது. அமருக்கு கழுத்தின் பின்புறத்தில் ஆழமான காயம் இருந்தது.

எப்போதும் எல்லோரையும் சிரிக்க வைத்துக்கொண்டே இருப்பார்” என கண்ணீர் மல்க பேசியிருக்கிறார்.