ஜே பீகார் மாநிலத்தில் நடைபெற்றுவரும் சட்டமன்றத் தேர்தலில் இரண்டாவது மற்றும் கடைசி கட்ட வாக்குப் பதிவு இன்று நடைபெற்று முடிந்திருக்கிறது. இன்றைய நாளில் மொத்தமாக 67.14 சதவிகித வாக்குகள் பதிவாகின.
ஏற்கெனவே, நவம்பர் 6-ம் தேதி நடந்த முதற்கட்ட வாக்குப்பதிவில் பீகார் தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு 64.66 சதவிகித வாக்குகள் பதிவாகின.
இந்த நிலையில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில், முதற்கட்ட வாக்குப்பதிவில் பதிவான வாக்குகளை விட இரண்டரை சதவிகித வாக்குகள் அதிகமாக 67.14 சதவிகித வாக்குகள் பதிவாகியிருக்கிறது.

இந்தத் தேர்தலில் பிரதான போட்டியாகத் தேசிய ஜனநாயகக் கூட்டணி vs மகாபந்தன் கூட்டணி போட்டிதான் கடந்த 2020 சட்டமன்றத் தேர்தலிலும் நிலவியது.
அதில், தனிப்பெரும் கட்சியாக மகாபந்தன் கூட்டணியின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் 75 இடங்களை வென்றது. ஆனாலும் மகாபந்தன் கூட்டணியால் ஆட்சியமைக்கத் தேவையான இடங்களை வெல்ல முடியவில்லை.
ராஷ்ட்ரிய ஜனதா தளத்துக்கு அடுத்தபடியாக அதிக இடங்களை வென்ற பா.ஜ.க-வும் (74), ஐக்கிய ஜனதா தளமும் (43) அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தமாக 125 இடங்களை வென்று ஆட்சியமைத்தது.
ஆனாலும், நிதிஷ் குமார்தான் முதலமைச்சராகப் பதவியேற்றார். இத்தனைக்கும் பா.ஜ.க-வை விட (110) கூடுதலாக 5 இடங்களில் போட்டியிட்ட ஐக்கிய ஜனதா தளம் (115), பா.ஜ.க-வை விட 31 இடங்கள் குறைவாகத்தான் வாங்கியது.
(அப்படியிருந்தும் 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக பா.ஜ.க-வை உதறிவிட்டு ஆர்.ஜே.டி, காங்கிரஸுடன் கூட்டணியமைத்து முதல்வராகி, பின்னர் இந்தியா கூட்டணியில் தனக்கு பிரதமர் வேட்பாளர் அந்தஸ்து கிடைக்காது என்று தெரிந்ததும் மீண்டும் பா.ஜ.க-வுடன் கூட்டணியமைத்து முதல்வரானதெல்லாம் தனி கதை).
ஆனால், இன்றைக்கு சூழல் அப்படியில்லை, கூட்டணியில் பா.ஜ.க-வும், ஐக்கிய ஜனதா தளமும் சரிசமமாக 101 இடங்களில் போட்டியிட்டிருக்கின்றன.

நிதிஷ் குமார்தான் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தாலும் தேர்தலில் அவர்கள் வெற்றிபெறும் பட்சத்தில் முழுமையாக ஐந்தாண்டுகளுக்கு அவரே முதலமைச்சராகத் தொடர்வாரா அல்லது மகாபந்தன் கூட்டணி வெற்றிபெற்றால் அவரின் அரசியல் வாழ்க்கை என்னவாகும் என்ற எதிர்பார்ப்பை இத்தேர்தல் உண்டாக்கியிருக்கிறது.
இதில், பிரசாந்த் கிஷோர் `ஜன் சுராஜ்’ என்ற தனிக் கட்சி ஆரம்பித்து தனித்துக் களமிறங்கியிருப்பதால் வாக்குகள் பிரியும் என்ற கணிப்புகளும் நிலவுகிறது. இந்த நிலையில், வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியிருக்கின்றன.

Matrize:
தேசிய ஜனநாயகக் கூட்டணி – 147 – 167
மகாபந்தன் கூட்டணி – 70 – 90
ஜன் சுராஜ் – 0 – 2
மற்றவை – 2 – 8
People’s Insight
தேசிய ஜனநாயகக் கூட்டணி – 133 – 148
மகாபந்தன் கூட்டணி – 87 – 102
ஜன் சுராஜ் – 0 – 2
மற்றவை – 3 – 6
Peoples Pulse:
தேசிய ஜனநாயகக் கூட்டணி – 133 – 159
மகாபந்தன் கூட்டணி – 75 – 102
ஜன் சுராஜ் – 0 – 5
மற்றவை – 2 – 8
NDTV:
தேசிய ஜனநாயகக் கூட்டணி – 152
மகாபந்தன் கூட்டணி – 84
ஜன் சுராஜ் – 2
மற்றவை – 5
DV Research:
தேசிய ஜனநாயகக் கூட்டணி – 137 – 152
மகாபந்தன் கூட்டணி – 83 – 98
ஜன் சுராஜ் – 2 – 4
மற்றவை – 1 – 8
JVC’s Poll:
தேசிய ஜனநாயகக் கூட்டணி – 135 – 150
மகாபந்தன் கூட்டணி – 88 – 103
ஜன் சுராஜ் – 0 – 1
மற்றவை – 3 – 6
P – Marq:
தேசிய ஜனநாயகக் கூட்டணி – 142 – 162
மகாபந்தன் கூட்டணி – 80 – 98
ஜன் சுராஜ் – 1 – 4
மற்றவை – 0 – 3

Dainik Bhaskar:
தேசிய ஜனநாயகக் கூட்டணி – 145 – 160
மகாபந்தன் கூட்டணி – 73 – 91
ஜன் சுராஜ் – 0 – 3
மற்றவை – 5 – 7
News 24:
தேசிய ஜனநாயகக் கூட்டணி – 133 – 159
மகாபந்தன் கூட்டணி – 75 – 101
ஜன் சுராஜ் – 0 – 5
மற்றவை – 2 – 8
Chanakya Strategies:
தேசிய ஜனநாயகக் கூட்டணி – 130 – 138
மகாபந்தன் கூட்டணி – 100 – 108
ஜன் சுராஜ் – 0
மற்றவை – 3 – 5
