SIR: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை கண்டித்து சென்னையில் தி.மு.க கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம்.

ஈரோட்டில் S.I.R எதிராக திமுக கூட்டணி கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது
சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு பணிகளை மேற்கொண்டு வரும் இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய அரசை கண்டித்து நெல்லை ரயில் நிலையம் முன்பு தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் நடைபெற்று வரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
பீகாரைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் `SIR’ எனும் வாக்காளர் பட்டியல் `சிறப்பு தீவிர திருத்தம்’ நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதனைத் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் எதிர்த்து வருகின்றன.
மறுபக்கம், பா.ஜ.க-வுடன் கூட்டணியில் இருக்கும் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க இந்த நடவடிக்கையை ஆதரித்து வருகிறது.

இந்த நிலையில், தேர்தல் ஆணையத்தைக் கண்டித்து தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் இன்று காலை 10 மணி முதல் சென்னை உட்பட 43 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.