தவறாக சித்தரிக்கப்பட்ட ட்ரம்ப் பேச்சு; சிக்கலில் BBC – என்ன நடந்தது?

அமெரிக்க அதிபர்‌ ட்ரம்ப் குறித்த பனோராமா டாக்குமெண்டரி பி.பி.சி செய்தி நிறுவனத்தில் சூறாவளியை ஏற்படுத்தி உள்ளது.

என்ன பிரச்னை?

சமீபத்தில் வெளியான பனோராமா டாக்குமெண்டரியில், 2021-ம் ஆண்டு ஜனவரி 6-ம் தேதி, வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் பேசிய பேச்சு வெட்டி ஒட்டப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

2021-ம் ஆண்டு‌ அமெரிக்க அதிபர்‌ தேர்தலில் தோல்வி அடைந்த பின், ட்ரம்ப் பேசியதாக, அந்த டாக்குமெண்டரியில், “கேபிட்டாலை நோக்கி வாருங்கள். நான் உங்களுடன் இருக்கிறேன்.‌ சண்டை போடுவோம்.

நாம் கடுமையாக சண்டையிட வேண்டும். இல்லையென்றால், நமது நாடு நமக்கு இருக்காது” என்று மக்களிடம் பேசுவதுபோல வைக்கப்பட்டுள்ளது. ட்ரம்பின்‌ இந்தப் பேச்சிற்கு‌ பிறகு தான், கேபிட்டாலில் கலவரம் ஏற்பட்டதாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது.

பிபிசி
பிபிசி

உண்மையில்…

ஆனால், ட்ரம்ப் அங்கு பேசியிருப்பதோ முற்றிலும் வேறு. அவர் உண்மையில், “கேபிட்டாலை நோக்கி வாருங்கள். நான் உங்களுடன் இருக்கிறேன்.‌ சண்டை போடுவோம்.

நாம் கடுமையாக சண்டையிட வேண்டும். இல்லையென்றால், நமது நாடு நமக்கு இருக்காது. நாம் இங்கு நமது தைரியமான செனட்டர்கள், காங்கிரஸ்காரர்கள், பெண்களை ஊக்குவிக்க வேண்டும்.

நீங்கள் இங்கு அனைவரும் அமைதியான முறையில் விரைவில் வருவீர்கள் என்பது எனக்கு தெரியும். உங்களுடைய தேசப்பற்று குரல்கள் இங்கு ஒலிக்கும்” என்று பேசியிருக்கிறார்.

ராஜினாமா

இந்த உண்மையை ‘தி டெய்லி டெலிகிராப்’ பத்திரிக்கை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது.

அதன்‌ பின், இந்தப் பிரச்னை பெரிய சர்ச்சையாக விஸ்வரூபம்‌ எடுத்தது.

இதையடுத்து, பி.பி.சி செய்தி நிறுவனத்தின் இயக்குநர் ஜெனரல் டிம் டேவி, தலைமை நிர்வாகி டெபோரா டர்னஸ் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

தனது ராஜினாமா அறிக்கையில் டிம் டேவி, ‘அனைத்து பொது நிறுவனங்களை போல, பி.பி.சியும் பெர்ஃபெக்ட்‌ ஆனது இல்லை.

மொத்தமாக பார்க்கும்போது, பி.பி.சி நன்றாக தான் செயலாற்றி வருகிறது. ஆனால், சில தவறுகளும் செய்துள்ளது. அதற்கு நான் பொறுப்பேற்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

ட்ரம்ப் பதிவு

இந்த ராஜினாமாவிற்கு பிறகு, ‘எனது வீடியோவை தவறாக சித்தரித்ததற்கு பி.பி.சி நிறுவனத்தின் தலைவர் உட்பட டாப் தலைவர்கள் பதவி விலகுகின்றனர்.

இந்த ஊழல் பத்திரிக்கையாளர்களை வெளிச்சம்‌ போட்டு காட்டியதற்கு தி டெலிகிராபிற்கு நன்றி.

பி.பி.சி நிறுவனம் மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது 1 பில்லியன் நஷ்ட‌ ஈடு வழக்கை சந்திக்க வேண்டும்” என்று ட்ரம்ப் பதிவிட்டிருந்தார். இதையடுத்து நேற்று பி.பி.சி நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.