காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் தளபதி பாஸ்கரின் பகீர் முடிவு; காவல்துறை விசாரணை

தமிழக காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் தளபதி பாஸ்கர் என்பவர் தற்கொலை முயற்சி செய்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இதுகுறித்து காவல்துறை விசாரணை செய்துவருகின்றனர்.

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளராக இருப்பவர் தளபதி பாஸ்கர். இவர் நேற்று ( நவ.3) இரவு வளசரவாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் மயங்கி கிடந்துள்ளார். விசாரிக்கையில், அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.

காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் தளபதி பாஸ்கர்
காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் தளபதி பாஸ்கர்

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து தளபதி பாஸ்கரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர்.

தற்கொலைக்கான காரணம் குறித்து வளசரவாக்கம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.