‘பாஜகவின் கிளை கழகமாக அதிமுக உள்ளது’ – திமுகவில் இணைந்த அதிமுக எம்எல்ஏ மனோஜ் பாண்டியன்

ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளரும், ஆலங்குளம் எம்.எல்.ஏ-வுமான மனோஜ் பாண்டியன் மு.க ஸ்டாலின் தலைமையில் இன்று (நவம்பர்.4) திமுக-வில் இணைந்திருக்கிறார்.

திமுக-வில் இணைந்தப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய மனோஜ் பாண்டியன், ” இன்று மாலை 4 மணிக்கு என்னுடைய எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்கிறேன். கொள்கைகளைப் பின்பற்றும் இயக்கமான திமுக-வில் இணைந்திருக்கிறேன்.

திமுகவில் இணைந்த மனோஜ் பாண்டியன்
திமுகவில் இணைந்த மனோஜ் பாண்டியன்

தமிழக உரிமைகளை அடகு வைக்காத தலைவர் ஸ்டாலின். பாஜக-வுடன் கூட்டணி இல்லை என்று கூறிவிட்டு எதன் அடிப்படையில் அவர்களுடன் இணைந்தார்கள்.

பாஜகவின் கிளை கழகமாக அதிமுக உள்ளது. ஒவ்வொரு தொண்டனின் உழைப்பையும் வேண்டாம் என்று விரட்டுகிறார் எடப்பாடி பழனிசாமி.

அதிமுகவை கூவத்தூர் பாணியில் கபளீகரம் செய்தவர்களுடன் எப்படி இருப்பது என்று சிந்தித்துதான் நான் திமுகவில் இணைந்துள்ளேன்.

மகிழ்ச்சியாக என்னை திமுகவினர் வரவேற்றிருகின்றனர். ” என்று கூறியிருக்கிறார்.