மலேசியாவில் மார்கோ ரூபியோவை சந்தித்த ஜெய்சங்கர்; வர்த்தக பேச்சுவார்த்தைக்கு பாசிட்டிவ் சிக்னல்?

தற்போது மலேசியாவில் ஆசியான் உச்சி மாநாடு நடந்து வருகிறது.

இதில் இந்தியா சார்பாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டுள்ளார்.

இந்த உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர்‌ ட்ரம்ப், பிரேசில் அதிபர் லூலா உள்ளிட்ட பல நாட்டு அதிபர்கள் கலந்து கொண்டுள்ளனர்… கலந்து கொள்கிறார்கள்.

ஜெய்சங்கர் - மார்கோ ரூபியோ
ஜெய்சங்கர் – மார்கோ ரூபியோ

சந்திப்பு

இந்த உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள சென்றுள்ள ஜெய்சங்கர் அமெரிக்க வெளியுறவுத் துறை செயலர் மார்கோ ரூபியோவை இன்று சந்தித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் ஜெய்சங்கர் பதிவிட்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமை நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் மார்கோ ரூபியோ, ‘இந்தியா உடனான உறவைக் கெடுத்து அமெரிக்கா பாகிஸ்தான் உடனான உறவை வலுப்படுத்தாது’ என்று தெரிவித்துள்ளார்.

இந்தியா – அமெரிக்கா பேச்சுவார்த்தை தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில், மார்கோ ரூபியோவின் இந்தப்‌ பேச்சு பாசிட்டிவ் சிக்னலைக் காட்டுகிறது.

நம்பலாம்!

ட்ரம்ப்பும் இந்திய பிரதமர் மோடி குறித்து தொடர்ந்து பாசிட்டிவாக பேசி வருகிறார்… இந்த உறவை மேலும் வலுப்படுத்துவதற்கான முன்னெடுப்புகளை செய்து வருகிறார்.

நேற்று நடந்த அமெரிக்க – சீன வர்த்தக பேச்சுவார்த்தை நல்லபடியாக முடிந்துள்ளது. இதனால், சீனாவின் மீது விதிக்கப்பட்டிருந்த கூடுதல் 100 சதவிகித வரி நீக்கப்பட்டிருக்கிறது.

முட்டி மோதிக்கொண்டிருந்த சீனா‌ உடனான பேச்சுவார்த்தையே நல்லபடியாக போய் கொண்டிருக்கும் பட்சத்தில், இந்தியா உடனான பேச்சுவார்த்தையும் நல்லபடியாகவே முடியும் என்று நம்பலாம்.