கரூர்: “மாற்றி மாற்றி பேசும் மா.சு, ரகுபதி; உடற்கூராய்வு கணக்கில் ஏன் குழப்பம்?” – அண்ணாமலை கேள்வி

தற்போது சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்து வருகிறது.

நேற்று முன்தினம் கரூர் சம்பவம் குறித்து விவாதிக்கப்பட்டது.

அப்போது, ‘கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு ஏன், எப்படி வேகமாக உடற்கூராய்வு செய்யப்பட்டது’ என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஏற்கெனவே இருந்த 3 மேஜைகளுடன் கூடுதலாக 2 மேஜைகள் போட்டு மொத்த 5 மேஜைகளில் உடற்கூராய்வு செய்யப்பட்டது என்று கூறியிருந்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 8 மேஜைகளில் உடற்கூராய்வு செய்யப்பட்டது என்று கூறினார்.

மா.சு - ரகுபதி
மா.சு – ரகுபதி

இதை விமர்சித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “கரூரில் தவெக கூட்டத்தில், நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேர் உடல்களை, 5 மேஜைகளில் 25 மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்தார்கள் என்று, நேற்று சட்டப்பேரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் கூறினார்.

ஆனால், சட்டப்பேரவைக்கு வெளியே பேசிய சட்டத்துறை அமைச்சர், 8 மேஜைகளில் பிரேத பரிசோதனை நடைபெற்றது என்று கூறியிருக்கிறார்.

பிரேத பரிசோதனைக்கு எத்தனை மேஜைகள் அமைத்தார்கள் என்பதிலே இத்தனை குழப்பம் ஏன்?” என்று சாடியிருக்கிறார்.