பீகார் சட்டமன்றத் தேர்தல்: முதல்வராகும் வாய்ப்பு யாருக்கு? வெல்லப்போகும் கூட்டணி? – கருத்துக்கணிப்பு

பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 243 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும், வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14-ம் தேதி நடைபெறும் எனத் தெரிவித்திருக்கிறது. இதற்கிடையே இந்தியா கூட்டணி – என்.டி.ஏ கூட்டணிகள் தொடர்ந்து தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் தொடங்கிவிட்டன.

இந்த நிலையில், சி ஓட்டர்ஸ் அடுத்த ஆட்சி அமைக்கப்போவது யார் என்பது குறித்த கருத்துக்கணிப்பு நடத்தியது. அதன் முடிவுகளையும் அறிவித்திருக்கிறது.

bihar
bihar

அதன்படி, `அடுத்த ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளும் கூட்டணியில், தேசிய ஜனநாயகக் கூட்டணி 40 சதவிகித வாய்ப்பும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு 38.3 சதவிகித வாய்ப்பும், பிரசாந்த் கிஷோரின் ஜான் சுராஜ் 13.3 சதவிகித வாய்ப்பும் இருக்கிறது.

விருப்ப முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி வரும்போது, இந்த முடிவு அப்படியே தலைகீழாக மாறுகிறது. 36.5% சதவிகித ஆதரவைப் பெற்று, ஆர்ஜேடி கட்சியின் தேஜஸ்வி யாதவ் முதலிடம் பிடிக்கிறார்.

அவரைத் தொடர்ந்து பிரசாந்த் கிஷோர் 23.2%, தற்போதைய முதல்வர் நிதிஷ் குமார் 15.9%, சிராக் பாஸ்வான் 8.8% வாக்குகளுடன் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தனர்.

பீகாரின் பிரச்னைகளை யாரால் தீர்க்க முடியும் என்ற கேள்விக்கு 36.5% பேர் இந்தியா கூட்டணி என்றும், 34.3% பேர் சதவிகித என்.டி.ஏ கூட்டணி என்றும், 12.8% பேர் பிரசாந்த் கிஷோரின் ஜான் சுராஜ் என்றும் வாக்களித்தனர். 9.4% பேர் யாராலும் முடியாது எனத் தெரிவித்திருக்கின்றனர்.

2020 சட்டமன்றத் தேர்தலில், பா.ஜ.க 110 இடங்களில் போட்டியிட்டு 74 இடங்களில் வெற்றி பெற்றது. ஜனதா தளம் (ஐக்கிய) 115 இடங்களில் போட்டியிட்டு 43 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.