அரசு விடுதியில் மாணவரை நிர்வாணப்படுத்தி தாக்குதல்; வைரலான வீடியோவால் பரபரப்பு

அரசு விடுதியில் தங்கிப் படித்த மாணவனை சக மாணவர்கள் தாக்கி நிர்வாணப்படுத்தி ராக்கிங் செய்து வீடியோ எடுத்த சம்பவம் மதுரை மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செக்கானூரணி காவல் நிலையம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்கானூரணியில் ‘அரசினர் தொழிற்பயிற்சி நிலையம்’ இயங்கி வருகிறது. இங்கு பயிலும் 70 மாணவர்கள் அருகிலுள்ள அரசு கள்ளர் மாணவர் விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 18 ஆம் தேதி விடுதியில் தங்கியிருந்த மாணவனை மற்ற மாணவர்கள் தாக்கி நிர்வாணப்படுத்தி ராக்கிங் செய்து வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவரின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் மூன்று மாணவர்கள் மீது செக்கானூரணி போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரசினர் தொழிற்பயிற்சி நிலையம்

மேலும் கவனக்குறைவாக இருந்ததாக விடுதிக் காப்பாளர் பாலமுருகனை கள்ளர் சீரமைப்புத்துறை பணியிடை நீக்கம் செய்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது. இந்தச் சம்பவம் இப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.