தமிழக வெற்றிக் கழகம் விஜய் : பாஜக நரேந்திர மோடி பரப்புரைக்கு மின்தடை செய்வீர்களா?

மன்னிப்பு கேட்ட விஜய்

“பெரம்பலூர் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். சீக்கிரமாக உங்களை வந்து சந்திக்கிறேன்”- தவெக விஜய்

‘2026 தேர்தலில் இருவருக்கு இடையேதான் போட்டி’- விஜய்

விஜய் பரப்புரை
விஜய் பரப்புரை

“ஒரு அரசியல் தலைவராக இல்லாமல் என் மக்களை நான் பார்க்க சென்றால் என்ன செய்வீர்கள். இனி தடை விதித்தால் மக்களிடம் நேரடியாக சென்று அனுமதி கேட்பேன். பூச்சாண்டி வேலை வேண்டாம். தேர்தலில் மோதி பார்ப்போம். மீண்டும் சொல்கிறேன் 2026 தேர்தலில் இருவருக்கு இடையேதான் போட்டி”- தவெக விஜய்

அரசியலில் சிலருக்கு ஓய்வும் கொடுக்கனும்

“உங்களுக்கு தொந்தரவு கூடாது என்பதால் தான் வார இறுதிநாளில் உரையாற்றுகிறேன். ஓய்வு நாட்களில் உங்களைப் பார்ப்பதோடு மட்டும் அல்லாமல் அரசியலில் சிலருக்கு ஓய்வும் கொடுக்க வேண்டும்”- தவெக விஜய்

திமுகவை விமர்சித்த விஜய்

திமுகவை விமர்சித்த விஜய்
திமுகவை விமர்சித்த விஜய்

“முதல்வர் சிரித்துக்கொண்டே சொல்கிறாரே, CM சார் அது வெளிநாட்டு முதலீடா? வெளிநாட்டுல முதலீடா? எங்களின் போர் முழக்கம் உங்களைத் தூங்கவிடாது முதல்வரே. முன்னேற்றத்திற்கு எங்கள் ஆட்சிதான் சாட்சி என அடுக்குமொழி பேசுவதைக் கேட்டு காதில் இரத்தம் வந்ததுதான் மிச்சம் “- தவெக விஜய்

மீனவ நண்பன் நான்…

“மீனவ மக்கள், விவசாயிகள் என உழைக்கும் மக்கள் இருக்கும் இடம் தான் நாகை. மீனவ நண்பனாக நான் இங்கு வந்திருக்கிறேன். மீனவர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை. இதே நாகையில் 14 ஆண்டுகளுக்கு முன்பு நான் குரல் கொடுத்தேன் “- தவெக விஜய்

என் மக்களை சந்திக்க ஏன் தடை?

விஜய் பரப்புரை
விஜய் பரப்புரை

“பாஜகவின் மறைமுக உறவுக்காரர்கள்தான் திமுகவினர். எனக்கு பரப்புரை மேற்கொள்ள விதிக்கும் கட்டுப்பாடுகள் மாதிரி மோடி, அமித்ஷாவுக்கு இப்படி கட்டுப்பாடு விதிப்பீர்களா? ஏன் மக்களை சந்திக்க ஏன் தடை விதிக்கிறீர்கள்”- விஜய்

‘நான் களத்துக்கு புதியவன் அல்ல’- தவெக விஜய்

“விஜய் களத்துக்கு புதியவன் அல்ல. மனசுக்கு நெருக்கமான நாகையில் பேசுகிறேன். உங்களுக்கு தொந்தரவு கூடாது என்பதால் தான் வார இறுதிநாளில் உரையாற்றுகிறேன். பாஜகவின் மறைமுக உறவுக்காரர்கள்தான் திமுகவினர். எனக்கு பரப்புரை மேற்கொள்ள விதிக்கும் கட்டுப்பாடுகள் மாதிரி மோடி, அமித்ஷாவுக்கு இப்படி கட்டுப்பாடு விதிப்பீர்களா?”- தவெக விஜய்

பரப்புரை திடலில் விஜய்; குவிந்த பல்லாயிரக்கணக்கான மக்கள்

விஜய்யின் பரப்புரையைக் கேட்க பல்லாயிரக்கணக்கான மக்கள் புத்தூர் அண்ணாசிலை அருகே குவிந்திருகின்றனர். இன்னும் சற்று நேரத்தில் விஜய் உரையாற்ற இருக்கிறார.

புத்தூர் ரவுண்டானாப் பகுதியில் விஜய் 

தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொள்ளும் நாகை புத்தூர் ரவுண்டானாவை வந்து சேர்ந்தார்.

அதிகரிக்கும் மக்கள் கூட்டம்

அதிகரிக்கும் மக்கள் கூட்டம்
அதிகரிக்கும் மக்கள் கூட்டம்

விஜய் பரப்புரை செய்யும் இடத்தை நோக்கி நெருங்கும் நிலையில் மக்கள் கூட்டம் மேலும் அதிகரித்து இருக்கிறது.

மின்தடை 

விஜய் பரப்புரை செய்யும் புத்தூரில் மின்தடை செய்யப்பட்டுள்ளது.

அண்ணாசிலையை நெருங்க உள்ள விஜய் 

இன்னும் 5 கிலோ மீட்டர் தொலைவில் பரப்புரை இடமான அண்ணாசிலை உள்ளது. விஜய்யின் பரப்புரை வாகனத்தை சூழ்ந்துக்கொண்டு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளிக்கிறார்கள்.

பின்தொடரும் தொண்டர்கள்

காவல்துறை அறிவிப்பை மீறி விஜய்யின் வாகனத்தைத் தொண்டர்கள் பின் தொடருகின்றனர். விஜய்யின் வாகனத்தின் முன்னும், பின்னும் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் மூலமும் தொண்டர்கள் பின் தொடருகின்றனர்.

வாஞ்சூர் நோக்கி விஜய்

நாகை மாவட்டத்திற்கு பரப்புரை மேற்கொள்ள வந்திருக்கும் விஜய், வாஞ்சூர் நோக்கிப் பயணப்பட்டுக்கொண்டிருக்கிறார். விஜய்யின் வாகனத்தைத் தொண்டர்கள் பின் தொடர்ந்துக் கொண்டிருக்கின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று நாகப்பட்டினம், திருவாரூரில் பரப்புரை செய்ய உள்ளார்.

காலை 11 மணி அளவில் நாகையில் உள்ள புத்தூர் அண்ணா சிலை சந்திப்பு அருகிலும், பிற்பகல் 3 மணிக்கு திருவாரூர் தெற்கு வீதியிலும் பரப்புரை மேற்கொள்ளவுள்ளார் விஜய்.

நாகை மற்றும் திருவாரூரில் பிரசாரம் மேற்கொள்ளும் விஜய் தனி விமானம் மூலம் திருச்சியை வந்தடைந்தார். திருச்சியில் இருந்து சாலை மார்க்கமாக அவர் நாகை செல்கிறார்.

நாகையில் பரப்புரை செய்யும் இடத்திற்கு வந்துள்ள விஜய் தேர்தல் பரப்புரை வாகனத்தில் இருந்து தனது இரண்டாவது கட்ட தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்கிறார்.

300-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நாகூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான மக்கள் நாகை அண்ணாசாலை இடத்தில் குவிந்துள்ளனர்.

கொண்டாட்டத்தில் தொண்டர்கள்

விஜய் நாகை வந்தடைந்த நிலையில் தவெக கொடியை அசைத்தும் நடனமாடியும் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விஜய் பேச இருக்கும் இடத்தில் கூடியுள்ள தொண்டர்கள்