ஸ்கேட்டிங்கில் உலக சாம்பியன் பட்டம்; சாதனை படைத்து அசத்திய தமிழக வீரர்!

சீனாவில் உலக ஸ்பீடு ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் நடந்து வருகிறது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த ஸ்கேட்டிங் வீரரான ஆனந்த குமார் பங்கேற்று சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்திருக்கிறார்.

உலக ஸ்பீடு ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் முதலாவதாக நடந்த சீனியர் ஆண்களுக்கான 500 மீ பிரிவில் 43.072 வினாடிகளில் ஸ்கேட்டிங் செய்து வெண்கல பதக்கத்தை உறுதி செய்திருந்தார். இதையடுத்து நடந்த ஆண்களுக்கான 1000 மீ பிரிவில் சிறப்பாக செயல்பட்ட ஆனந்த குமார், ஒரு நிமிடம் 24 வினாடிகளில் (1:24.924) முதலாவதாக முடித்து தங்கத்தை தட்டிச் சென்றிருக்கிறார்.

ஸ்கேட்டிங் சாம்பியன் ஆனந்த குமார்

இந்த வெற்றியின் மூலம் உலக ஸ்பீடு ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் சீனியர் அரங்கில் தங்கம் வென்ற முதல் இந்தியரும், தமிழருமானார் ஆனந்த்குமார். 2021ல் நடந்த ஜூனியர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியிலும் வெள்ளிப் பதக்கம் வென்று ஆனந்த்குமார் சாதனைப் படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் ஸ்கேட்டிங் சாம்பியன் ஆனந்திற்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

இதேபோல நேற்று நடந்த ‘பிடே’ கிராண்ட் சுவிஸ் செஸ் தொடரில் மகளிர் பிரிவில் இறுதிப் போட்டியில் வைஷாலி தொடர்ந்து 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியிருக்கிறார். இன்னொரு பக்கம் உலக ஸ்பீடு ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றிருக்கிறார் ஆனந்த்குமார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த வைஷாலி செஸ் போர்டிலும், ஆனந்த் குமார் ஸ்கேட்டிங் போர்டிலும் உலக அளவில் சாம்பியன்ஷிப் பட்டம் வென்று தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்ந்த்திருக்கின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs