நேபாளத்தின் முதல் பெண் பிரதமராக சுசீலா கார்கி பதவியேற்பு; முன்னெடுத்த Gen Z போராட்டக்காரர்கள்

ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் சமூக வலைத்தளத் தடைக்கு எதிராக Gen Z இளைஞர்கள் நடத்திய போராட்டத்தின் முன் அடிபணிந்த பிரதமர் கே.பி. சர்மா ஒலி கடந்த செவ்வாயன்று பதவியை ராஜினாமா செய்து தலைமறைவானார்.

அதையடுத்து, இடைக்கால அரசுக்கு தலைமையேற்க அந்நாட்டின் முதல் பெண் தலைமை நீதிபதியான சுசீலா கார்கியை (Sushila Karki) போராட்டக்காரர்கள் முன்மொழிந்தனர்.

நேபாள போராட்டம்
நேபாள போராட்டம்

முதலில் போராட்டக்காரர்களின் இந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்த சுசீலா கார்கி பின்னர் இடைக்கால அரசுக்கு தலைமையேற்க ஒப்புக்கொண்டார்.

அதைத்தொடர்ந்து, நேற்று (செப்டம்பர் 12) இரவு நேபாள ஜனாதிபதி ராம் சந்திர பௌடெல், சுசீலா கார்கிக்கு பிரதமராகப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இதன்மூலம், நேபாள அரசியல் வரலாற்றில் முதல் பெண் பிரதமர் எனும் சிறப்பை பெற்றார் சுசீலா கார்கி.

இவருடன் இடைக்கால அமைச்சர்கள் யாரும் பதவியேற்காததால், விரைவில் இடைக்கால அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டு சுசீலா கார்கி அதனை வழிநடத்துவார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs