Tirupati: “ஆன்லைன் புக்கிங் மோசடிகள்; பக்தர்கள் கவனத்திற்கு…” – திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை

உலக பிரசித்தி பெற்ற திருப்​பதி ஏழு​மலை​யான் கோயி​லில் இந்த ஆண்டு வரு​டாந்​திர பிரம்​மோற்​சவம் வரும் செப்டம்பர் 24-ம் தேதி முதல் அக்​டோபர் 2-ம் ​தேதி வரை நடைபெறவிருக்கிறது.

கொடியேற்​றம், சின்ன சேஷ வாகனம், சிம்ம வாக​னம்,  முத்​துப்​பல்​லக்கு,  கற்பக விருட்சக வாக​னம், சர்வ பூபால வாக​னம், மோகினி அலங்​காரம்,  தங்க ரத ஊர்​வலம், தேர்த்​திரு​விழா,  சக்கர ஸ்நான நிகழ்ச்சி என நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

அப்படி என்ன இருக்கிறது அந்தத் திருப்பதியில்? அங்கிருக்கும் பெருமாள் மட்டும் அப்படி என்ன விசேஷம்?

பல்வேறு மாநிலங்கள், நாடுகளிலிருந்து லட்சக் கணக்கான பக்தர்கள் வருகை தர இருப்பதால் திருப்பதி தேவஸ்தானம் மற்றும் மாநகராட்சி தீவிரமான முன் ஏற்பாட்டுப் பணிகளில் இறங்கியிருக்கிறது.

இந்நிலையில் இலவச தரிசனம், தங்குமிடம் ஆன்லைன் புக்கிங் என்று போலி விளம்பர மோசடியில் நம்பி பக்தர்கள் ஏமாற வேண்டாம் என்றும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் திருப்பதி தேவஸ்தானம் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது

திருப்பதி

திருமலை திருப்பதி… ஒட்டு மொத்த பாரத தேசமும் சொந்தம் கொண்டாடத்துடிக்கும் இந்த நிலம் தமிழ் மக்களுக்கானது. வரலாற்றில் அதுதான் தமிழகத்தின் தொன்மையான வட எல்லை.

இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம், “இணையதளங்களில் ‘திருப்பதியில் தங்குமிடம், இலவச தரிசனம் உள்ளிட்டவற்றை ஏற்பாடு செய்கிறோம். ஸ்ரீனிவாச கல்யாண நிகழ்ச்சி நடத்துகிறோம்’ என்றெல்லாம் வரும் போலி விளம்பரங்களை பக்தர்கள் நம்ப வேண்டாம். இதுபோன்ற மோசடியில் ஈடுபடுபவர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று முன்னெச்சரிக்கை கொடுத்திருகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs