TET தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்; நவம்பர் 15, 16 ஆம் தேதிகளில் தேர்வு

‘ஆசிரியர் பணியில் தொடர்வதற்கும் பதவி உயர்வு பெறுவதற்கும் ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயம்’ எனச் செப்டம்பர் 1ஆம் தேதி அன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும், ‘அவ்வாறு தேர்வு எழுத விருப்பம் இல்லையென்றால் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பிக்கலாம்’ எனவும் தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிப்படைவார்கள் என ஆசிரியர்கள் கூட்டணி சங்கங்கள் அதிருப்தியைத் தெரிவித்திருக்கின்றன. இது பணியில் இருக்கும் ஆசிரியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில் ஆகஸ்ட் 11ஆம் தேதி முதல் ஆசிரியர் தகுதித் தேர்வுக்காக விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியிருந்தது.

பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு TET தேர்வின் தேர்ச்சி கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து பணியில் இருக்கும் ஆசிரியர்களும் விண்ணப்பிக்கத் தொடங்கிவிட்டனர்.

இதற்கிடையில் ஏற்கனவே புதிதாக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பவர்களும் ஏராளமானோர் விண்ணப்பித்து வருகின்றனர்.

இந்நிலையில், செப்டம்பர் 8ஆம் தேதி கடைசி தேதி என்பதால் ஏராளமானோர் விண்ணபித்ததால் அன்று காலை 11 மணிக்குப் பிறகு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் முடங்கிவிட்டது.

இதனால் ஏராளமானோர் விண்ணப்பிக்க முடியாமல் ஏமாற்றத்திற்குள்ளாகினர்.

tet exam

இதன் காரணமாக விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்தது பள்ளிக்கல்வித் துறை. அதன்படி விண்ணப்பப் பதிவு செயல்முறை இன்று (10.09.2025) மாலையுடன் முடிவடைகிறது.

ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் நவம்பர் 15 மற்றும் 16ஆம் தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ‘trb.tn.gov.in’ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs