“செங்கோட்டையனை உறுதியாகச் சந்திப்பேன்” – ஓ.பன்னீர்செல்வம் பேசியது என்ன?

செங்கோட்டையனை உறுதியாகச் சந்திப்பேன் என்று அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியிலிருந்த செங்கோட்டையன், “அதிமுக ஒன்று சேர வேண்டும், பிரிந்தவர்கள் இணைந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்,” என்று கூறியுள்ளார்.

செங்கோட்டையன்
செங்கோட்டையன்

“10 நாள்களுக்குள் இது நடக்கவில்லை என்றால், தேர்தல் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க மாட்டேன்,” என்று நேற்று முன்தினம் (செப். 5) கறாராகப் பேசியிருந்தார்.

சசிகலா, ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன் உள்ளிட்டோர் குறித்து பெயர் குறிப்பிடாமல், “அதிமுகவில் ஒன்று சேர வேண்டும்” என்ற கருத்தைத்தான் அவர் வலியுறுத்தி இருந்தார்.

செங்கோட்டையன் இந்தக் கருத்தை முன்வைத்ததற்குப் பிறகு அவரது பதவி பறிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தேனியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய ஓ. பன்னீர்செல்வம், “செங்கோட்டையன் அண்ணனின் இந்த முயற்சிக்கு என்னுடைய முழு ஆதரவு உள்ளது.

ஓ. பன்னீர்செல்வம்
ஓ. பன்னீர்செல்வம்

“அவர் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் என்னுடைய வாழ்த்துகள். 10 நாட்கள் கால அவகாசம் கொடுத்திருக்கிறார்.

அது முடிந்தபின், அனைவரையும் சந்தித்து பேசுவார் என்று நினைக்கிறேன். செங்கோட்டையனை உறுதியாகச் சந்திப்பேன்,” என்று உறுதியளித்துள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk