Vijay Mallya: கிங் ஃபிஷர் காலாண்டரில் `தீபிகா, கத்ரீனா’ இடம்பெற்றது குறித்து விஜய் மல்லையா பேச்சு

பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸின் வருடாந்திர நாள்காட்டிக்கு பாலிவுட் நடிகைகள், மாடல்களின் புகைப்படங்கள் பயன்படுத்தியது குறித்து சமீபத்தில் பேசியுள்ளார்.

இப்போது இயக்கத்தில் இல்லாத கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் மல்லையாவின் தொழில்வாழ்க்கையில் முக்கிய நிறுவனமாக இருந்தது.

2000-களில் கிங் ஃபிஷர் பெயர் பெற்ற விமான நிறுவனமாக இருந்தது. அப்போது அவர்கள் வெளியிட்ட வருடாந்திர காலாண்டர்கள் பேச்சுபொருளாக இருந்தன. 2003-ம் ஆண்டு புகைப்பட கலைஞர் அதுல் காஸ்பேகர் உடன் இணைந்து கவர்ச்சியான நீச்சலுடை காலாண்டராக அது உருவாகத் தொடங்கியது.

சமீபத்தில் பாட்காஸ்டர் ராஜ் ஷமானியுடன் உரையாடிய மல்லையா, கத்ரீனா கைஃப், தீபிகா படுகோனே போன்ற பாலிவுட் நடிகைகள் கிங் ஃபிஷர் காலாண்டரில் இடம்பெற்றது குறித்து பேசியிருக்கிறார்.

Vijay Mallya பேசியதென்ன?

“நாங்கள் சரியான பெண்களைத் தேர்ந்தெடுத்தோம். அது தீபிகா கடுகோனேவாக இருந்தாலும் சரி, கத்ரீனா கைஃபாக இருந்தாலும் சரி, எல்லா நடிகைகளையும் நட்சத்திரங்களையும் இளம் வயதிலேயே நாங்கள் பயன்படுத்தினோம். சரியான திறமையைக் கண்டறிந்தோம்.” எனப் பெருமிதம் கொண்டார்.

மேலும், “அதில் தனிப்பட்ட விஷயங்கள் ஒன்றுமில்லை, சிறப்பான மார்கெட்டிங் கருவியாக இருந்ததால் அதைச் செய்தோம். அது பிராண்டுக்கு அதிசயங்களைச் செய்தது” எனக் கூறியுள்ளார் மல்லையா.

கிங் ஃபிஷர் காலாண்டர்

ஒரு காலத்தில் கிங் ஃபிஷர் காலாண்டர் நட்சத்திரங்கள் உருவாகும் இடமாக இருந்தது. அதன் முதல் 2003 பதிப்பில் கத்ரீனா கைஃப் இடம் பெற்றிருந்தார். தீபிகா 2006 பதிப்பின் அங்கமாக இருந்தார்.

இந்த காலாண்டர் உருவாக்கத்தை அடிப்படையாகக் கொண்டே 2015-ம் ஆண்டு மதுர் பண்டார்கர் காலாண்டர் கேர்ல்ஸ் என்ற படத்தை இயக்கினார். அதுமாடலிங் செய்யும் பெண்கள் துறையில் புகழ்பெறுவதற்காக எத்தகைய ஆபத்துகளை எதிர்கொள்கின்றனர் என்பதை அடிப்படையாகக் கொண்டு உருவானது.