Bengaluru Stampede: “மகனுக்காக நான் வாங்கிய இடத்திலேயே அவனது கல்லறை..” – தந்தையின் சோகக் குரல்

ஐபிஎல்-லில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி தனது முதல் கோப்பையை வென்றதற்கு, கடந்த ஜூன் மாலை ஆர்.சி.பி வீரர்களை நேரில் அழைத்து சிறப்பிக்க அரசு சார்பில் சட்டமன்றத்தில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால் சட்டமன்றத்துக்கு அருகில் சாலைகளிலும், சின்னசாமி ஸ்டேடியதுக்கு வெளியேயும் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. இதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11பேர் உயிரிழந்தனர், 47பேர் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Bengaluru Stampede
Bengaluru Stampede

கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் கண்ணீர்விட்டு அழும் கணொலிகள் காண்போரின் நெஞ்சங்களை உலுக்கி வருகிறது. அவ்வகையில் இக்கூட்ட நெரிசலில் இறந்த 21 வயது பூமிக் லட்சுமணனின் தந்தை, மகனின் கல்லறையில் கதறி அழுத காணொலி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மகனின் கல்லறையில் கண்ணீர் விட்டு அழுதபடி பேசியிருக்கும் லட்சுமணன், “என் மகனுக்கு நடந்த சோகம் யாருக்கும் நடக்கக்கூடாது. என் மகனுக்காக நான் வாங்கிய இடத்திலேயே அவனது கல்லறையை கட்டவேண்டிய சோக நிலை ஏற்பட்டுவிட்டது.

Bengaluru Stampede: பூமிக் லட்சுமணனின் தந்தை

என் மகன் என்னவிட்டு போய்விட்டான், இனி நான் எங்கே போவது. அவனது கல்லறையிலே நான் இருந்துவிடுகிறேன்” என்று மகனின் கல்லறையை நீங்க மனமில்லாமல் கண்ணீர்விடும் கணொலி மனதை உலுக்கி வருகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs