இந்தியா – பாக்., எல்லையில் அதிகரிக்கும் பதற்றம்; பாதுகாப்பு அமைச்சகத்தின் 10 முக்கிய நடவடிக்கைகள்!

இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூரால் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்ற நிலை அதிகரித்து வருகிறது.

இதனால், இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அவை:

1. இந்தியா-பாகிஸ்தான் எல்லை முழுவதுமாக மூடப்பட்டுள்ளது.

2. சந்தேகத்திற்குரியவராக யாராவது தென்பட்டால், எல்லைப் பாதுகாப்பு வீரர்கள் அவர்களைச் சுடலாம்.

3. எல்லைப் பகுதியில் வசிக்கும் மக்களைத் தவிர, வேறு யாரும் எல்லைப் பகுதிக்குச் செல்லக் கூடாது.

4. பாதுகாப்புக் காரணங்களால், ஜோத்பூர், கிஷன்கர் மற்றும் பிகானேர் விமான நிலையங்களில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

5. எல்லைப் பகுதிகளைச் சேர்ந்த காவல்துறை மற்றும் ரயில்வே ஊழியர்களின் விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

operation sindoor
Operation Sindoor – ஆபரேஷன் சிந்தூர்

6. சுசுோய்-30 எம்கேஐ ஜெட் விமானங்கள் கங்காநகரில் இருந்து ரான் ஆஃப் கட்ச் வரை வான்வழி ரோந்துப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

7. எல்லைப் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது மற்றும் பரீட்சைகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.

8. எல்லைப் பகுதிகளில் உள்ள மக்களை அரசு பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றம் செய்து வருகிறது.

9. டிரோன் தாக்குதல்களைத் தடுக்க ஆன்டி-டிரோன் அமைப்பு செயல்படுத்தப்பட்டுள்ளது.

10. எல்லைப் பகுதிகளில் கூட்டம் கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது.