அமெரிக்காவில் ஆவணம் செய்யப்படாமல் குடியேறி இருக்கும் மக்களை வெளியேற்றுவது வழக்கம் தான். இது 2009-ம் ஆண்டிலிருந்து வழக்கத்தில் இருக்கிறது. ஆனாலும், இந்த ஆண்டு வெளியேற்றப்பட்டது தான் உலகம் முழுவதும் கடும் சர்ச்சையை கிளப்பியது.
காரணம், இந்த ஆண்டு அமெரிக்க அதிபராக பதவியேற்று இருக்கும் ட்ரம்ப். ஆவணம் செய்யப்படாமல் அமெரிக்காவில் குடியேறி இருக்கும் மக்களை அமெரிக்காவின் ராணுவ விமானத்தில் கைவிலங்கிட்டு அவர்களது சொந்த நாட்டிற்கு அனுப்பினார் ட்ரம்ப்.

இது பெரும்பாலான நாடுகள் விரும்பவில்லை. இதற்கு எதிராக குரல் கொடுத்தன.
தற்போது, ஆவணம் செய்யப்படாத மக்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேற திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி உதவி செய்வதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.
ட்ரம்ப் எப்படி உதவி செய்வார்?
ஆவணம் செய்யப்படாமல் அமெரிக்காவில் இருக்கும் மக்கள் தாங்களாகவே வெளியேற விருப்பப்பட்டால், அவர்களுக்கு அமெரிக்க அரசு பணமும், விமான டிக்கெட்டும் வழங்கும்.
அமெரிக்காவில் இருந்தப்போது, அவர்கள் எந்த குற்ற செயல்களிலும் ஈடுபடவில்லை என்றால் தான் இந்த உதவி அந்த நபருக்கு கிடைக்கும்.
இதற்காக அமெரிக்க அரசு புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஆஃபரும் உள்ளது!
இப்படி வெளியேற்றப்படும் மக்கள் எந்த குற்றமும் செய்யாதவராகவும், அவர் அமெரிக்காவிற்கு தேவைப்படுபவராகவும் இருந்தால் அவர் அமெரிக்காவில் தொடர்ந்து இருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக எடுக்கப்படும்.
இந்த வெளியேற்றம் முழுக்க முழுக்க ‘குற்ற செயலில் ஈடுபடுபவர்களுக்கு தான் என்று ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இது ட்ரம்ப் நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாகும்.
இதுவரை இந்த விஷயத்தில் கடுமையாக நடந்துவந்த ட்ரம்ப், இப்போது இந்த நிலைபாட்டை எடுத்துள்ளார் என்பது நிச்சயம் ஆச்சரியமான விஷயம்.