மதுரை: டாஸ்மாக் மதுக்கடையில் தகராறு; போலீஸ்காரரை தாக்கி கொலை செய்த கும்பல்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே போலீஸ்காரர் முத்துக்குமார் டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உசிலம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டரின் டிரைவராக கள்ளப்பட்டியை சேர்ந்த முத்துக்குமார் பணியாற்றி வருகிறார்.

முத்துக்குமார்

இன்று பணி முடிந்து முத்தையன்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தச் சென்றுள்ளார் முத்துக்குமார். அப்போது, அங்கே மது அருந்திக்கொண்டிருந்த கஞ்சா வழக்கில் தொடர்புள்ள சிலருக்கும் முத்துக்குமாருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

அதன் பின்பு வெளியே வந்த முத்துக்குமாரை அந்த கும்பல் துரத்தி வந்து கல்லால் தாக்கியுள்ளது. இதில் கடுமையாக காயமடைந்து இறந்துள்ளார். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. முத்துக்குமாருடன் இருந்த கள்ளபட்டியைச் சேர்ந்த ராஜாராம் என்பவரும் படுகாயமடைந்த நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கொலை (Representational Image)

சம்பவம் கேள்விப்பட்டு விரைந்து வந்த மதுரை மாவட்ட எஸ்.பி. அரவிந்த், உசிலம்பட்டி டிஎஸ்பி சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த வாரம் மதுரை அவனியாரம் அருகில் சிவகங்கை மாவட்டத்தில் பணியாற்றிய தனிப்பிரிவு போலீஸ் மலையரசன் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது உசிலம்பட்டி அருகே போலீஸ்காரர் முத்துக்குமார் கொலை செய்யப்பட்ட சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel