ஹமாஸின் மூத்த தலைவர் பலி; 6 நாள்களில் 600 பேர் உயிரிழப்பு – மீண்டும் தொடங்கிய இஸ்ரேலின் தாக்குதல்!

கடந்த ஜனவரி மாதம், அமெரிக்கா மற்றும் கத்தார் மத்தியஸ்தம் செய்ய ஒப்பந்தம் மற்றும் பேச்சுவார்த்தையால் தற்காலிக போர் நிறுத்தத்தை எட்டியது இஸ்ரேல் – காசா போர்.

இந்த மாதம், அடுத்தக்கட்ட போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடக்க இருந்த சமயத்தில், சமீபத்தில் போர் நிறுத்தத்தை பின்பற்றாமல் காசா மீது தாக்குதலை நடத்தியது இஸ்ரேல்.

`பணய கைதிகளை ஹமாஸ் விடுவிக்கவில்லை’ என்பதைக் காரணமாக கூறியது இஸ்ரேல். இதனால், கடந்த ஆறு நாள்களாக தொடர்ந்து வருகிறது காசாவின் மீதான இஸ்ரேல் தாக்குதல்.

இஸ்ரேல் – காசா போர்

இந்த நிலையில், இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், ஹமாஸின் முக்கிய தலைவர் ஒருவர் உயிரிழந்ததாக தகவல்கள் பரவியது. இந்தத் தகவலை உறுதி செய்துள்ளது ஹமாஸ் அமைப்பு.

இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்த ஹமாஸ் மூத்த தலைவர் சலா அல்-பர்தாவில். இன்று அதிகாலையில் காசாவின் கான் யூனிஸ் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இவர் உயிரிழந்துள்ளார். இவர் மட்டுமல்லாமல், இந்தத் தாக்குதலில் இவரது மனைவி மற்றும் குழந்தையும் உயிரிழந்துள்ளனர்.

கடந்த செவ்வாய் கிழமை முதல், இஸ்ரேலால் கிட்டதட்ட 600 பாலஸ்தினீயர்கள் உயிரிழந்துள்ளனர். இதற்கு, பதிலடி கொடுக்க ஹமாஸ் தொடங்கினால், மீண்டும் இஸ்ரேல் – காசா போர் உச்சமடையும்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel