எந்திரா… Sci fic படங்களின் தாக்கம்; ரோபோவை துணையாகதேர்ந்தெடுத்த சீன நபர் -ஒரு நாள் வாடகை தெரியுமா?

சினிமா எப்போதும் பலருக்கு நிதர்சன வாழ்க்கையில் அபரிமிதமான தாக்கத்தை ஏற்படுத்தும். அப்படியான கதைகளையும் நாம் கேட்டிருப்போம். ஆனால், சீனாவைச் சேர்ந்த ஒரு இளைஞர் சினிமாவின் தாக்கத்தால் செய்த ஒரு செயல் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

Humanoid Robot
Humanoid Robot

சீனாவைச் சேர்ந்த ஜாங் என்ற இளைஞருக்கு சயின்ஸ் பிக்‌ஷன் கதைகளைக் கொண்ட படங்கள் என்றால் அலாதி ப்ரியம். அப்படி தொடர்ந்து சயின்ஸ் பிக்‌ஷன் படங்களை பார்த்து அதனால் ஈர்க்கப்பட்டிருக்கிறார். இதனால் ஈர்க்கப்பட்டவர் நிஜ வாழ்க்கையில் ஒரு ரோபோவுடன் சேர்ந்து வாழ முடிவு செய்திருக்கிறார்.

25 வயதான இவர் நியூ யார்க் பல்கலைகழகத்தில் பொருளாதார பட்டப்படிப்பை முடித்திருக்கிறார். ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சி மூலமாக பிரபலமடைந்த இந்த இளைஞர் தற்போது இன்ப்ளூயன்சராக 1.4 மில்லியன் பின் தொடர்பாளர்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் கொண்டிருக்கிறார். நிதர்சன வாழ்க்கையில் ரோபோவுடன் இணைந்து வாழ முடிவெடுத்த இவர் இந்த ரோபோவுக்காக நாளொன்றுக்கு 1,20,000 ரூபாயை வாடகையாக செலுத்தி வருகிறார்.

Zhang Genyuan
Zhang Genyuan

இந்த ரோபோ 127 செ.மீ உயரம் மற்றும் 35 கிலோ எடை கொண்டது. ஜாங்குடன் சேர்ந்து சமைப்பது, வீட்டைச் சுத்தம் செய்வது உள்பட வீட்டு வேலைகள் அனைத்தையும் இந்த ரோபோ கவனித்துக் கொள்கிறது. அதுமட்டுமல்ல, இந்த இளைஞருடன் இணைந்து காஃபி ஷாப் செல்வது, ஷாப்பிங் செல்வது போன்ற விஷயங்களையும் இந்த ரோபோ செய்து வருகிறது.

வேட்டை நாய்கள் – Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் – Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks