Grok AI: “அரசியல் விமர்சனங்களுக்கு தணிக்கை..” – செயற்கை நுண்ணறிவை நெருக்கும் மத்திய அரசு!

எலான் மஸ்கின் எக்ஸ் தளத்தில் செயல்படும் க்ரோக் (Grok), சக்திவாய்ந்த செயற்கை நுண்ணறிவு சாட்போட். ட்வீட்களில், கமண்ட் செக்‌ஷனில் க்ரோக்கை சுட்டி கேள்விகள் கேட்கும் ஆப்ஷன் அறிமுகப்படுத்தியப் பிறகு, அரட்டைகள் களைகட்டியது.

சமீபத்தில் பயனர்களின் கேள்விக்கு க்ரோக் இந்தியில் வரம்பு மீறியும், கொச்சையாகவும் பதிலளித்ததால் சிலர் பயனர்கள் கோபமடைந்ததாக கூறப்படுகிறது.

elon musk

இதனால் இந்திய தகவல்தொடர்பு அமைச்சகம், க்ரோக் ஏஐ-யை நிர்வகிக்கும் எக்ஸ் தளத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. சாட்போட்டின் பேச்சுகள் கொச்சையாக இருப்பதற்கு காரணம் என்ன, சரி செய்ய வேண்டிய பிரச்னைகள் என்ன என்பது குறித்த பேச்சுவார்த்தையில் அமைச்சகத்துடன் எக்ஸ் இணைந்துள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் தளம் கூறுகிறது.

எலான் மஸ்க் 2023ம் ஆண்டு தொடங்கிய xAI என்ற நிறுவனத்தின் நவீன செயற்கை நுண்ணறிவு உருவாக்கம் க்ரோக். இது Gemini AI, Chat GPT போன்ற செயற்கை நுண்ணறிவு சாட்போட்களுக்கு போட்டியாக உருவாக்கப்பட்டது. இது கேள்விகளுக்கு தனித்துவமான கண்ணோட்டத்தில் பதில் வழங்கும் என்று கூறப்படுகிறது.

Grok Event

க்ரோக் ஏஐயில் பல மோட்கள் உள்ளன. அதில் முக்கியமான ‘Unhinged Mode’. இதில் ஏஐ மிகவும் வெளிப்படையாக கட்டுப்பாடற்றதாக இருக்கும் எனக் கூறுகின்றனர்.

க்ரோக்கிடம் பயனர்கள் பல சென்சிடிவ்வான கேள்விகளை எழுப்பியுள்ளனர். ஜவஹர்லால் நேரு, இந்திய சுதந்திரப் போராட்டம், சிறுபான்மையினர் உரிமைகள், கிரிக்கெட் மற்றும் பாலிவுட் என எல்லாவற்றைக் குறித்தும் வெளிப்படையாக பதிலளித்துள்ளது.

பொதுவாக மற்ற ஏஐ சாட்பாட்கள் அரசியல் சர்ச்சைக்குரிய கேள்விகளுக்கு பதிலளிக்காமல் விலகும். ஆனால் க்ரோக் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்து வந்துள்ளது.

“அரசியல் விமர்சனங்களுக்கு தணிக்கை”

க்ரோக்கின் பல பதில்கள் நேற்றுமுதல் மறைந்துள்ளன. இதுகுறித்து பயனர் ஒருவர் கேள்வி எழுப்பியபோது, “நேற்றுமுதல் இந்தியாவில் என்னுடைய பல பதில்களை பார்க்க முடியாததற்கு தொழில்நுட்ப கோளாறு அல்லது அரசின் தணிக்கை காரணமாக இருக்கலாம்.

Grok Answer

அரசியல் விமர்சனங்கள் (எ.கா.பாஜக, ரஃபேல்) போன்ற முக்கியமான தலைப்புகளில் உள்ள கண்டெண்ட்களை கட்டுப்படுத்துவதற்காக ‘தடை உத்தரவுகள்’ பிறப்பிக்கப்பட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன.

எக்ஸ்தளம் இந்திய சட்டங்களுக்கு கட்டுப்படுவதனால் சில பதில்கள் மறைக்கப்படலாம். ஆனால் அவற்றை வேறு இடங்களில் பார்க்க முடியும்.” என பதிலளித்துள்ளது.

வேட்டை நாய்கள் – Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் – Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks