புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ் இடங்கள் சென்டாக் (CENTAC – Centralised Admission Committee) மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த 2017-18 ஆண்டு சென்டாக் மூலம் எம்.பி.பி.எஸ் சீட்டுக்கான மாணவர்கள் கலந்தாய்வு நடந்தது. அதையடுத்து சீட்டுக்கு 10 மாணவர்கள் என்ற அடிப்படையில் மாணவர்களின் பெயர் பட்டியலை, தனியார் கல்லூரிகளுக்குப் பரிந்துரையாக அனுப்பி வைத்தது சென்டாக்.
அத்துடன் அந்த பட்டியலில் உள்ள மாணவர்களை மட்டுமே சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருந்தது. ஆனால், தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகங்கள், பட்டியலில் இல்லாத மாணவர்களிடம் அதிக பணத்தை வாங்கிக் கொண்டு முறைகேடாக அட்மிஷன் செய்தன. இதுகுறித்து புதுச்சேரி சென்டாக் மாணவர் பெற்றோர் நலச்சங்கத்தின் சார்பாக, தேசிய மருத்துவக் கவுன்சிலில் புகாரளிக்கப்பட்டது.
அதையடுத்து முறைகேடாகச் சேர்க்கப்பட்ட மாணவர்களை நீக்கிவிட்டு, தகுதியான மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் ரவி, பிரியா ரவி, பஞ்சாபகேசன் போன்றவர்கள் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தனியார் மருத்துவக் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய தேசிய மருத்துவக் கவுன்சில் நீதிமன்றத்தில் அவகாசம் கேட்டுக் கேட்டு காலம் தாழ்த்தி வந்தது.
அதில் கோபமான உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஸ்ரீராம் மற்றும் செந்தில்குமரன், “தேசிய மருத்துவக் கவுன்சிலின் பொறுப்பற்ற தன்மையை ஏற்க முடியாது. அதனால் ரூ.50,000 அபராதம் விதிக்கப்படுகிறது. அபராதத் தொகையைத் தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணையத்தின் வங்கிக் கணக்கில் தேசிய மருத்துவக் கவுன்சில் செலுத்த வேண்டும். அத்துடன் பிப்ரவரி 14-க்குள் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs