அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிப்பெற்ற டொனால்ட் ட்ரம்ப் 47-வது அதிபராக இன்று பதவி ஏற்றுக் கொண்டார். அமெரிக்கா அதிபராக இரண்டாவது முறை ட்ரம்ப் பதவியேற்ற இந்த நிகழ்வு உலக அரங்கில் கவனம் பெற்றிருக்கிறது. பதவியேற்பு விழா எந்தளவுக்கு கவனிக்கப்படுமோ, அதேபோல அதிபர் பதவிக்காக நடத்தப்படும் தொடக்க விழாவும் அங்கு மிகவும் பிரபலம். இந்த விழாவுக்கு உயர்மட்ட அழைப்பாளர்களுக்கு விருந்து ஏற்பாடு நடந்தது. அதில், உலகளாவிய வணிகத் தலைவர்கள், அரசியல்வாதிகள், முக்கியப் பிரமுகர்கள் கலந்துக்கொண்டு புதிய நிர்வாகத்தைக் கொண்டாடினர்.

இந்த நிகழ்ச்சியில் ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானியும், ரிலையன்ஸ் அறக்கட்டளைத் தலைவர் நீதா அம்பானியும் கலந்துக்கொண்டிருக்கின்றனர். அம்பானியும், நீட்டா அம்பானியும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புடன் எடுத்துக்கொண்டப் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலானது.

வெள்ளை மாளிகையில் நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் முன்னாள் அதிபரான ஜோ பைடனும் கலந்து கொண்டார். இந்த பதவியேற்பு நிகழ்வில் டிரம்ப் குடும்பத்தினர் கலந்து கொண்டிருந்தனர். அதிபர் ட்ரம்ப் பதவியேற்பு நிகழ்வில் முக்கிய அம்சமாக பைடன் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறும் நிகழ்வும் அதனைத் தொடர்ந்து ட்ரம்ப் தன் குடும்பத்துடன் வெள்ளை மாளிகையில் குடியேறும் நிகழ்வும் நடைபெறுகிறது.
அதிபராக ட்ரம்ப் பதவி ஏற்பதற்கு முன்னர், அமெரிக்காவின் துணை அதிபராக வேன்ஸ் பதவி ஏற்று கொண்டார்.