ஈரோடு கிழக்கு: “பெரியார் குறித்து சீமான் பேசியது சரிதான்” – நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடைகிறது. இந்தத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் மணீஷிடம் வேட்புமனுவைச் சீதாலட்சுமி இன்று (ஜனவரி 17) தாக்கல் செய்தனர். இதைத் தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “60 ஆண்டுக்கால திராவிட ஆட்சியில் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த உள்ளது‌. ஈரோட்டில் விவசாயிகள் மற்றும் நெசவாளர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை விட்டுச் செல்ல தி.மு.க ஆட்சிதான் காரணம். அரசியல் என்பது மக்களுக்குச் செய்யும் சேவை. இதைத் திராவிடக் கட்சிகள் சேவையாகப் பார்க்கவில்லை.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி

திராவிடக் கட்சிகள் சுயநலத்திற்காகச் செயல்படுகின்றனர். அதனால்தான் மஞ்சள் மாநகரம் என்று அழைக்கப்பட்ட ஈரோடு இன்று புற்றுநோய் மாநகரமாக மாறியுள்ளது. காளிங்கராயன் வாய்க்காலில் கோழிக்கழிவு செல்கிறது‌. அடிப்படை சாலை மற்றும் சாக்கடை வசதி இல்லை. இதைச் சரி செய்வதற்குப் பதிலாக தி.மு.க அரசு தேவையில்லாத இடத்தில் திட்டத்தைக் கொண்டு வருகிறது. கடந்த தேர்தல்களில் தி.மு.க பணத்தால் விலைபேசி வாக்கைப் பெற்றது. இந்த தேர்தலில் அது முடியாது. பதாகைப் பிடித்து நின்ற நாம் தமிழர் கட்சியினர் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி சட்டத்திற்கு எதிரானவர்கள் இல்லை. பெரியார் குறித்து சீமான் பேசியது சரிதான். பெரியார் சொல்லாததைச் சீமான் சொல்லவில்லை. சீமான் பேசியது அனைத்தும் சரிதான்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs