Palamedu Jallikattu 2025 Live: ஆட்டம் காட்டும் காளைகள்; அடக்க துடிக்கும் வீரர்கள்… அட்டகாச ஜல்லிக்கட்டு!

ஜல்லிக்கட்டில் டங்ஸ்டன் எதிர்ப்பு!

மதுரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பார்வையாளர்கள் பதாகைகள் ஏந்தி வந்துள்ளனர். காளையின் மீது ‘டங்ஸ்டன் தடைசெய்’ என்ற வசனத்தை எழுதி அழைத்து வந்துள்ளனர்.

குவியும் பரிசுகள்!

பாலமேடு ஜல்லிக்கட்டில் முதலிடம் பெறும் வீரருக்கு துணை முதலமைச்சர் வழங்கும் கார் பரிசாக வழங்கப்படும். முதலிடம் பெறும் மாடுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கும் ட்ராக்டர் பரிசாக வழங்கப்படும். இரண்டாம் பரிசு பெறும் வீரருக்கு இரு சக்கர வாகனம் மற்றும் இரண்டாம் இடம் பெறும் மாட்டுக்கு கன்றுடன் கூடிய பசு பரிசாக வழங்கப்படும். இது தவிர, சைக்கிள், அண்டா, மெத்தை, நாற்காலி, தங்க நாணயம் உள்ளிட்ட பல பரிசுப்பொருள்கள் வழங்கப்படவுள்ளன.

1000 vs 900

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 1000 மாடுகளும் 900 வீரர்களும் பங்கேற்கவுள்ளனர். சுமார் 2400 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தொடங்கியது ஜல்லிக்கட்டு

மதுரை மாவட்டம் பாலமேட்டின் இன்று ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இன்று களம்காணும் காளைகளுக்கும், வீரர்களுக்கும் உடல் தகுதி பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கோவில் காளை அவிழ்த்துவிடப்பட்டு முதல் சுற்று தொடங்கியது.