Rain Alert: ‘அடுத்த 2 மணி நேரத்துக்கு, சென்னையின் இந்த பகுதிகளில் மழை பெய்யும்’ – வானிலை ஆய்வு மையம்

நேற்று முதல் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் விட்டு விட்டு லேசான முதல் மிதமான மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள தற்போதைய அறிக்கையின்‌ படி, இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யும்.

சென்னையில் உள்ள மற்றும் அதை சுற்றியுள்ள திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, பொன்னேரி, ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத் ஆகிய பகுதிகளில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு மழை பெய்யும்.

.

‘இந்த’ சென்னை பகுதிகளில் மழை!’

நேற்றைய சென்னை வானிலை மைய அறிக்கையின் படி, இன்று தமிழ்நாடு கடலோர பகுதிகளில் காற்றின் வேகம் 35 டு 45 கிலோ மீட்டர் வேகத்தில் இருந்து 55 கிலோ மீட்டர் வேகமாக உயரும்.

தென் மேற்கு வங்கக்கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று வலுப்பெற்று வட தமிழ்நாடு கடலோர பகுதி வழியாக நகரும்.

இதனால், வட தமிழ்நாட்டின் கடலோர பகுதிகள் மற்றும் புதுச்சேரியில் இன்று சில இடங்களில் மழை பெய்யலாம் என்று கூறப்பட்டிருந்தது.