வரும் ஜனவரி மாதம், டிரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க உள்ளார். அவர் அதிபராக பதவியேற்றப் பிறகு, அவரிடம் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கை மற்றும் அறிவிப்புகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த திங்கள்கிழமை நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய டிரம்ப், “பரஸ்பரம் என்ற சொல் மிக முக்கியமானது. இந்தியா மற்றும் பிரேசில் போன்ற நாடுகள் அமெரிக்க பொருள்கள் மீது அதிக வரி விதிக்கின்றது. இந்தியா அமெரிக்காவுக்கு 100 சதவிகித வரி விதித்தால், நாமும் அதுப்போல செய்கிறோமா?
அவர்கள் சைக்கிளில் அனுப்புகிறார்கள். அதற்கு சைக்கிளையே நாம் அனுப்புகிறோம். அவர்கள் 100 மற்றும் 200 சதவிகிதம் வரி விதிக்கிறார்கள். இந்தியாவும், பிரேசிலும் அதிக வரியை விதிக்கிறது. அவர்கள் இப்படி நமக்கு அதிக வரியை விதிக்க வேண்டுமானால், விதிக்கட்டும். நாமும் அதே மாதிரியான வரியை விதிக்கப்போகிறோம்” என்று கூறியுள்ளார்.