10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதார் அட்டையில் நமது தகவல்களை அப்டேட் செய்வது அவசியம். காரணம், அந்த 10 ஆண்டுகளில் முகத்தோற்றம் முதல் முகவரி வரை மாறியிருக்கலாம்.
பல இடங்களில் ஆதார் அட்டை அடையாள அட்டையாக செயல்படுவதால், அதை எப்போதும் அப்டேட்டாக வைத்திருப்பது அவசியம். ஆக, உங்கள் ஆதாரில் சில விஷயங்களை உங்கள் இடத்தில் இருந்தப்படியே ஈசியாக அப்டேட் செய்யலாம். அதுவும் இலவசமாக… ஆனால், இங்கே தான் ஒரு செக். இந்த அப்டேட்டுகளை ஆன்லைனில் இலவசமாக இன்னும் இரண்டு நாட்களுக்கு மட்டும் தான் அப்டேட் செய்ய முடியும்.

அவை என்னென்ன அப்டேட்டுகள்?
பெயர், பிறந்த தேதி, முகவரி போன்ற மாற்றங்களை அடையாள மற்றும் முகவரி சான்றுகள் வைத்து ஆன்லைனிலேயே ஈசியாக செய்துகொள்ளலாம்.
எப்படி?
-
முதலில், myaadhaar.uidai.gov.in வலைதளத்திற்குள் செல்லவும்.
-
‘Log in’ஐ கிளிக் செய்து ஆதார் எண் மற்றும் கேப்சாவை நிரப்பி ‘Send OTP’-ஐ தட்டுங்கள். வரும் OTP-ஐ நிரப்பினால் Log in ஆகி கொள்ளலாம்.
-
இப்போது வரும் பக்கத்தில், ‘Document Update’-ஐ கிளிக் செய்யவும்.
-
பின்னர் வரும் வழிமுறைகளை படித்து ‘நெக்ஸ்ட்’ கொடுக்கவும்.
-
உங்களுக்கு மாற்ற வேண்டிய மாற்றங்களை செய்து, அடையாளம் மற்றும் முகவரி சான்றை அப்டேட் செய்யவும்.
மேலே கூறிய வழிமுறைகள் படி, எப்போது வேண்டுமானால் அப்டேட் செய்யலாம். ஆனால், அந்த அப்டேட்டிற்காக இரண்டு நாட்களுக்கு பிறகு, கட்டணம் செலுத்த வேண்டும். மேலும், ஆதார் மையங்களில் இந்த மாற்றங்களை செய்தாலும் கட்டணம் செலுத்த வேண்டும்.!