Adani Ports: $553 மில்லியன் அமெரிக்க கடனை நிராகரித்த அதானி துறைமுகம்..! பின்னணி என்ன?

இலங்கையின் மிகப்பெரிய மற்றும் ஆழமான கண்டெய்னர் முனையமாக உருவாகி வருகிறது கொழும்பு மேற்கு சர்வதேச முனையம். இந்த முனையத்தில் அதானி துறைமுகத்திற்கு 51 சதவிகிதம் பங்கு உண்டு.

2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்த முனையத்தின் வேலைகள், வரும் ஆண்டு கிட்டதட்ட முடிந்துவிடும்.

இந்த முனையத்தின் வேலைக்காக டி.எஃப்.சி என்ற நிறுவனத்திடம் முன்பு கடன் கேட்டிருந்தது அதானி நிறுவனம். டி.எஃப்.சி என்றால் அமெரிக்க சர்வதேச வளர்ச்சி நிதி நிறுவனம் ஆகும். கடந்த ஆண்டு நவம்பர் மாதம், முனையப் பணிகளுக்காக 553 மில்லியன் டாலரை கடனாக வழங்குவதாக கூறியிருந்தது டி.எஃப்.சி நிறுவனம்.

Adani

டி.எஃப்.சி அதானிக்கு கடன் வழங்குவதாக கூறியிருந்ததற்கு முக்கிய காரணமே, இலங்கையில் சீனாவின் செல்வாக்கை குறைப்பது தான். ஆனால், சமீப காலமாக அமெரிக்காவின் ஊழல் குற்றச்சாட்டால், அதானி குழுமத்தின் பங்கு மதிப்பு சற்று சரிந்திருக்கிறது.

இந்த முனைய உருவாக்கத்தில் அதானி குழுமம் மட்டுமில்லை…ஜான் கீல்ஸ் ஹோல்டிங் நிறுவனம், இலங்கை துறைமுகமும் இருக்கிறது.

இந்த நிலையில், டி.எஃப்.சி கடன் கொடுக்க வேண்டுமானால், அதானி குழுமம் மற்றும் இலங்கை துறைமுகம் மத்தியில் போடப்பட்ட ஒப்பந்தம் மாற்றப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறது.

இதனை மறுத்து, தன் குழுமத்தின் நிதியை பயன்படுத்துவதாக அதானி குழுமம் கூறியுள்ளது.