தமிழ்நாடு சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.
கேள்வி நேரத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்குத் துறைசார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். அவ்வகையில் திருப்புகழ் கமிட்டி பரிந்துரைப்படி ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் மழை நீர் வடிகால் அமைக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான செல்வப்பெருந்தகை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் கோரிக்கை ஒன்றை வைத்தார்.

“நீர்வளத்துறை அமைச்சர் அனுபவம் வாய்ந்தவர், எதைச் செய்தாலும் முழுமையாகச் செய்யக்கூடியவர். அரை குறையாகச் செய்யாதவர். அதையெல்லாம் நாடறியும். கடந்த வாரம் பெய்த மழையால் என்னுடைய தொகுதியில் உள்ள வரதராஜபுரம், முல்லை நகர், தனலட்சுமி நகர், பிடிசி நகர், அஷ்டலட்சுமி நகர் போன்ற இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. இந்த பகுதிகளில் அரைகுறையாக வேலை நடந்துள்ளது. முன்பு மழை வந்தால் 10 நாட்கள் தண்ணீர் நிற்கும். ஆனால் இப்போது உங்களது முயற்சியால் ஒரு நாளில் வடிந்துவிடுகிறது.
இருந்தபோதிலும் நான் குறிப்பிட்ட பகுதியில் முற்றிலும் தண்ணீர் தேங்காமல் இருக்க திருப்புகழ் கமிட்டி பரிந்துரையை நிறைவேற்ற வேண்டும். இதை முதல்வர் நிறைவேற்றுவார் என்று மக்களிடம் வாக்குறுதி கொடுத்திருக்கிறேன்.
இதை நீங்கள் நிறைவேற்றுவீர்கள் என்று நான் என் தொகுதி மக்களிடம் கூறியிருக்கிறேன். எனக்கும் நெருக்கடி இருக்கிறது. நான் மீண்டும் சட்டமன்ற உறுப்பினராவது அமைச்சர் துரைமுருகன் கையில்தான் உள்ளது” எனச் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.

அதற்குப் பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், “உறுப்பினர் நல்லா மாட்டிக்கிட்டாரு. அடுத்த முறை எம்.எல்.ஏ-வாகனும்னா அது என் கையிலதான் இருக்கு. திருப்புகழ் கமிட்டி மட்டுமில்ல, திருவாசக கமிட்டி கொடுத்தாலும் செய்வோம். கவலைப்படாதீர்கள் குறைகள் தீர்க்கப்படும். மழைநீர் தேங்குவதாகச் சொல்லக்கூடிய பகுதிகளில் அரசு கவனம் செலுத்தும்” என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs