Sonia Gandhi: `ஜார்ஜ் சோரோஸ் நிதி அளிக்கும் அமைப்புகளுடன் சோனியாவுக்கு தொடர்பு’ – பாஜக குற்றச்சாட்டு

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான சோனியா காந்திக்கு அமெரிக்க தொழிலதிபரான ஜார்ஜ் சோரோஸ் நிதியுதவி செய்யும் அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக பா.ஜ.க குற்றம்சாட்டியிருக்கிறது.

அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபரான ஜார்ஜ் சோரோஸ், வெளிநாட்டு விவகாரங்களில் மூக்கை நுழைக்கக்கூடியவர் எனும் விமர்சனம் உண்டு. இதை வைத்துதான் இப்போது பா.ஜ.க, ‘காஷ்மீரை தனிநாடு’ என கூறும் சக்திகளோடு காங்கிரஸ் இணைந்திருப்பதாக குற்றம்சாட்டியிருக்கிறது. ஆசிய பசுஃபிக் ஜனநாயக தலைவர்களின் கூட்டமைப்பில் சோனியா காந்தி இணை தலைவராக இருக்கிறார்.

அந்த அமைப்புக்கு ஜார்ஜ் சோரோஸின் அறக்கட்டளைதான் நிதியுதவிகளை செய்து வருவதாக பாஜக கூறுகிறது. ‘அந்த ஆசிய பசுஃபிக் அமைப்பு காஷ்மீர் தனி நாடு எனும் பார்வையை கொண்டது. அந்த அமைப்புடன் சோனியா காந்தி தொடர்பில் இருப்பதன் மூலம் இந்தியாவின் உள் விவகாரங்களில் வெளிநாடுகளின் அரசியல் தலையீட்டுக்கு உதவுதை விளங்கிக் கொள்ள முடியும்.

ராகுல் காந்தி அதானிக்கு எதிராக பேசிய பத்திரிகையாளர் சந்திப்பை ஜார்ஜ் சோரோஸிடம் நிதியுதவி பெறும் ஊடகங்கள்தான் ஒளிபரப்பு செய்தனர். இதன் மூலம் நம்முடைய நாட்டின் பொருளாதாரத்தின் மீது தாக்குதல் நடத்த முற்படுகின்றனர்.

காங்கிரஸ் எம்.பி சசி தரூரும் ஜார்ஜ் சோரோஸ் என்னுடைய பழைய நண்பர் என கூறியிருக்கிறார். இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.’ என பா.ஜ.க கூறியிருக்கிறது. இந்த குற்றச்சாட்டு அதிருப்தியளிப்பதாக அமெரிக்க தூதரகம் தங்களின் வருத்தத்தை வெளிப்படுத்தியிருக்கிறது.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

https://bit.ly/SeenuRamasamyKavithaigal