நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
“வருண்குமார் ஐபிஎஸ் நீண்ட நாள்களாக கண்காணித்து கொண்டுதான் இருக்கிறார். புதிதாக எதுவும் சொல்லவில்லை. நாங்கள் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து 13 ஆண்டுகளாக கட்சி நடத்தி வருகிறோம். தேர்தலில் நின்று 36 லட்சம் வாக்குகளை பெற்று, தமிழ்நாட்டின் 3வது தனிப்பெரும் கட்சியாக இருக்கிறோம்.
இவர் நாட்டை ஆளுகிறாரா… எதை வைத்து பிரிவினைவாதிகள் என்று சொல்கிறார். அடிப்படை தகுதி இல்லாமல் அவர் எப்படி ஐபிஎஸ் ஆனார். தமிழ் தமிழர் என்பது பிரிவினைவாதமா?. உன் தாய் மொழி எது. உண்மையான தமிழ் தாய் தந்தைக்கு பிறந்திருந்தால் இப்படி பேச மாட்டார். உனக்கு மட்டும் தான் மனைவி, குழந்தை உள்ளதா. பேசும் போது பார்த்து பேச வேண்டும். அந்த மாநாட்டில் இவர் பேசியது மட்டும் எப்படி வெளியே வருகிறது. இதுதான் உன் வேலையா. என் கட்சியை குறை சொல்ல தான் ஐபிஎஸ் ஆனாரா. காக்கி உடையில் இன்னும் எத்தனை காலம் இருக்க முடியும். மோதுவது என்று முடிவாகிவிட்டது மோதலாம்.
நடிகர் விஜய் மக்களுக்கு உதவ நினைப்பதை குறை சொல்ல முடியாது. எப்போதும் குறை சொல்லிக் கொண்டு இருக்க நாங்கள் மன நோயாளி அல்ல. சரி என்றால் சரி. தவறு என்றால் தவறு. எந்த புயல் பாதிப்புக்கும் மத்திய அரசு உதவி செய்யவில்லை. மாநிலங்கள் தரும் வரியை எடுத்து வைத்துவிட்டு பேரிடர் காலங்களில் கூட மத்திய அரசு உதவுவது இல்லை. இதை கேள்வி கேட்டால் ஆன்டி இந்தியன் என்கிறார்கள்.
குஜராத், பீகார் மாநில வெள்ள பாதிப்பிற்கு உடனே நிதி ஒதுக்கீடு செய்கிறார்கள். தேர்தல் வெற்றி தோல்வி எல்லாம் எனக்கு நான்காம் பட்சம் தான். மண்ணும் மக்களும் தான் எனக்கு முக்கியம். அஸ்ஸாமில் மாட்டிறைச்சி தடை விதிக்கப்பட்டு இருப்பது கேவலமானது. நான் என்ன கறி வேண்டுமானாலும் உண்பேன். உணவு, உடை என்பது உரிமை.” என்றார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…
https://bit.ly/SeenuRamasamyKavithaigal
