புதிதாகக் கட்டி முடிக்கப்பட்டுள்ள பாராளுமன்றத்தின் மக்களவையில் உள்ள இருக்கையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் அரசியலைப்புச் சட்டம் குறித்து விவாதிக்கப்பட இருக்கும் நிலையில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி அமைச்சரவையில் 58வது இருக்கையிலிருந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்குத் தற்போது இருக்கைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 4வது மற்றும் 5வது இருக்கைகள் காலியாக இருந்தன. அந்த இடம் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா ஆகிய மூன்று பேருள் இருவருக்கு ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. திடீரென 4வது இருக்கை மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் அமித் ஷா அருகில் நிதின் கட்கரிக்கு இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி முதல் இருக்கையிலும், இரண்டாவது இருக்கையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், மூன்றாவது இருக்கையில் அமித் ஷாவும் இருக்கின்றனர். எதிர்க்கட்சி வரிசையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு 498வது இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. அவருக்கு அருகில் காங்கிரஸ் செயலாளர் வேணுகோபாலுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்விற்கு 355வது இருக்கையும், திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சுதீப்பிற்கு 354வது இருக்கையும் ஒதுக்கப்பட்டுள்ளன. திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சிகளுக்கு முன் வரிசையில் தலா ஒரு இருக்கை மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளன.
காங்கிரஸ் கட்சியில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்திக்கு எதிர்க்கட்சிகள் வரிசையில் 4வது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தின் மழை காலக்கூட்டத் தொடரின்போது ஆங்காங்கே மழை நீர் கசிவு இருந்தது. அந்த தண்ணீரைப் பிடிக்க வாலிகள் வைக்கப்பட்டு இருந்த காட்சி வெளியாகி சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…
