மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம்… ஆதரிக்கும் அரசு; எதிர்க்கும் விவசாயிகள்.. டங்ஸ்டன் எதற்கு பயன்படும்?

மதுரை – அரிட்டாபட்டி, நாயக்கர்பட்டி, மீனாட்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசின் ஒப்புதலுடன் வேதாந்தா நிறுவனம் ஏலம் எடுத்திருக்கிறது.

இதற்கு பொதுமக்கள், விவசாயிகள், சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் என பலரும் கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையடுத்து, இந்தத் திட்டத்தை ரத்து செய்யவேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருக்கிறார். இந்நிலையில் `ஆரம்பத்தில் ஒத்துழைப்பு வழங்கிவிட்டு, இப்போது எதிர்ப்பு நாடகம் போடுகிறது தி.மு.க அரசு’ என எதிர்க்கட்சித் தலைவர்கள் அடுத்தடுத்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

அரிட்டாபட்டி

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக வரும் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் தனி தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்திருக்கிறார். தமிழக அரசியலில் பரபரப்பாக பேசப்படும் இந்த டங்ஸ்டன் என்றால் என்ன? எதற்கெல்லாம் இது பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்து பார்ப்போம். டங்ஸ்டன் என்பது இயற்கையாகக் கிடைக்கக்கூடிய ஒரு உலோகப்பொருள்.

மேலும் scheelite மற்றும் Wolframite ஆகியவற்றின் தாதுக்களில் இருந்தும் டங்ஸ்டன் பிரித்தெடுக்கப்படுகிறது. ரசாயன கலவையாக பாறைகளில் படிந்து காணப்படும் டங்ஸ்டன் தாது சீனாவில் அதிக அளவில் காணப்படுகிறது. சீனாவிற்கு அடுத்தபடி வியட்நாம், ரஷ்யா, கனடா, பொலிவியா, போன்ற நாடுகளில் இருக்கிறது. இந்தியாவை பொறுத்தவரை சுமார் 8 கோடி டன் டங்ஸ்டன் காணப்படுகிறது.

டங்ஸ்டன்

அதில் அதிகபட்சமாக கர்நாடகாவில் மட்டும் 3.6 கோடி டன் டங்ஸ்டன் உள்ளது. ராஜஸ்தான், மாகராஷ்டிரா, ஆந்திரா, மேற்கு வங்கத்திலும் இந்த டங்ஸ்டன் காணப்படுகிறது. 1900 ஆம் ஆண்டுகளில் கண்டுபிடிக்கபட்ட இந்த டங்ஸ்டன் முதலில் குண்டு பல்புகளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பிறகு அதிக ஒளியை தரும் halogen பல்புகளிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

எண்ணெய் சுத்திகரிப்பு துறை மற்றும் போலி தங்கக்கட்டிகள் ராணுவத்தில் புல்லட்டுகளுக்கும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. குறிப்பாக மின்சார வாகனங்களுக்கு தேவைப்படும் பேட்டரிகளில் உபயோகிக்கப்படுகிறது. இப்படி இதன் தேவை அதிகமாக இருப்பதால் டங்ஸ்டன் உற்பத்தியில் இந்தியா உள்ளிட்ட நாடுகள் கவனம் செலுத்துகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs