முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் நீதித்துறை குறித்து தெரிவித்த கருத்துக்கு கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா.
மாநில சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகாள் செய்யும் பணியை நீதித்துறை செய்யும் என மக்கள் அனுமானிக்கக் கூடாது என்று சந்திரசூட் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் மேற்கு வங்க எம்.பி மஹுவா மொய்த்ரா, ‘நீங்கள் உங்கள் வேலையைச் செய்வீர்கள் என்றுதான் எதிர்பார்க்கிறோம்’ என தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
“இல்லை, தலைமை நீதிபதி DYC – நீங்கள் எதிர்க்கட்சிகளின் பணியைச் செய்ய வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. நீங்கள் உங்கள் வேலையைச் செய்வீர்கள் & எங்கள் அரசியலமைப்பையும் சட்டங்களையும் நிலைநிறுத்துவீர்கள் என்றுதான் நினைத்தோம். ஆனால் நீங்கள் வழிபாட்டு தலங்கள் சட்டம் 1991 ஐ தூக்கி எறிந்தீர்கள் மற்றும் ஒவ்வொரு சங்கி நீதிபதியும் ஒவ்வொரு மசூதியையும் தோண்ட அனுமதித்தீர்கள். அவமானம்!” என்று தனது பதிவில் எழுதியுள்ளார் மஹுவா மொய்த்ரா.
No Chief Justice DYC – we didn’t expect you to do Opposition’s job. We expected you to do your job & uphold our constitution & laws. Not throw out Places of Worship Act 1991 & allow every mosque to be dug up by every Sanghi judge. Shame!
— Mahua Moitra (@MahuaMoitra) November 28, 2024
மேற்கு வங்க மாநிலம் அஜ்மீரில் உள்ள தர்கா சிவன் கோயிலை இடித்துக்கட்டப்படாத வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து தர்கா கமிட்டி, தொல்லியல் துறை மற்றும் சிறுபான்மை விவகார அமைச்சகம் பதிலளிக்க அஜ்மீர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில்தான் முன்னாள் நீதிபதியை விமர்சித்துப் பேசியுள்ளார் மஹுவா மொய்த்ரா.
முன்னதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, எதிர்க்கட்சிகள் நீதித்துறையின் பணிகளைச் செய்வதாக பேசியிருந்ததற்கு பதிலளிக்கும் விதமாக, “நான் எதிர்க்கட்சித் தலைவருடன் நேரடியாக விவாதிக்க விரும்பவில்லை, ஆனால் இதை நான் தெளிவுபடுத்த வேண்டும் – நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற அமைப்புகளில் எதிர்க்கட்சியின் பங்கை நீதித்துறை நிறைவேற்ற வேண்டும் என்று மக்கள் கருதக் கூடாது. நாங்கள் அதற்காக இங்கு இல்லை, எங்கள் கவனம் ‘சட்டங்களை ஆராய்வதில்’ உள்ளது.” என்று பேசியிருந்தார்.