Adani: `அதானி நிறுவனத்திடம் லஞ்சம்?’ – அமெரிக்க குற்றச்சாட்டுக்கு ஜெகன் மோகன் ரெட்டி விளக்கம்!

அதானி மற்றும் அவரது கூட்டாளிகள் சோலார் மின்சார ஒப்பந்தங்களைப் பெருவதற்கு இந்தியாவின் பல்வேறு அரசு அதிகாரிகளுக்கு 2000 கோடி ரூபாய் வரை லஞ்சம் கொடுத்ததாக அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

“மாநில மின்சார விநியோக நிர்வாகங்களுடனான சோலார் மின்சக்தி ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக 2020ம் ஆண்டும் முதல் 2024ம் ஆண்டுவரை பெரும் தொகை இதற்காக கைமாற்றப்பட்டுள்ளது” என்கிறது அமெரிக்க நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றப்பத்திரிகை.

ஜெகன் மோகன் ரெட்டி

இதனால் மாநில மின்வாரியங்களை நோக்கி கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. முன்னதாக தமிழ்நாடு மின்சார வாரியமும், ஒடிஷா மின்சார வாரியமும் குற்றச்சாட்டுகளை மறுத்திருக்கின்றன.

அதானி நிறுவனத்திடம் ஆந்திர அதிகாரிகளே அதிகபட்ச லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ₹1,675 கோடி ஆந்திராவில் வழங்கப்பட்டதாக குற்றப்பத்திரிகை தெரிவிக்கிறது.

இந்த நிலையில் அதானி நிறுவனம் தொடர்பான குற்றச்சாட்டு குறித்துப் பேசியிருக்கிறார் ஆந்திர பிரதேசம் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி.

ஜெகன் மோகன் ரெட்டி கூறுகையில், “சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா என்ற இந்திய பொதுத்துறை நிறுவனம் தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிஷா உள்ளிட்ட மாநிலங்களுக்கு 2.49 ரூபாய் என்ற குறைந்த விலையில் மின்சாரம் வழங்கப்பட்டது. அதிகாரப்பூர்வமான சில தள்ளுபடிகளும் இருந்ததால் அரசு பணம் சேமிக்கப்பட்டது.

இது மாநில மின்சார விநியோக நிறுவனம் மற்றும் மத்திய அரசு நிறுவனத்துக்கு இடையிலான ஒப்பந்தம். இதில் வேறு நிறுவனங்களின் தலையீடு இருக்கிறதா என்ற கேள்விக்கு இடமில்லை என்று குறிப்பிட்டு பேசினார்.

அதானி நிறுவன ஊழல் விவகாரம் வெளியானபோது புதிய ஆந்திர அரசு மின்சார ஒப்பந்தங்களை ரத்து செயப்போவதாக பேச்சுகள் எழுந்தன. அதுகுறித்து, அப்படிச் செய்வது புத்திசாலித்தனமான நடவடிக்கையாக இருக்காது என்று தெரிவித்துள்ளார் ஜெகன் மோகன்.

Gautam Adani – கெளதம் அதானி

மேலும் அவர், அரசியல் உள்நோக்கம் கொண்ட ஈநாடு மற்றும் ஆந்திரஜோதி ஆகிய செய்தி நிறுவனங்கள் மீது வழக்கு தொடரப்போவதாகவும் தெரிவித்தார். இந்த நிறுவனங்கள் இன்றைய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் கையில் இருப்பதாகவும் இவற்றிடம் ரூ.100 கோடிக்கு நஷ்ட ஈடு கேட்கப்போவதாகவும் கூறியுள்ளார்.

அதானி உடனான சந்திப்புகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, அதானி ஆந்திராவில் வேறுசில திட்டங்களில் பங்குபெறுகிறார். மாநில முதல்வர் தொழிலதிபர்களைச் சந்திப்பது வழக்கமானதுதான். சந்திப்புகளின் மூலம் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படுகிறது” என்று தெரிவித்தார்.

ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்போது, அது கண்களை இருவிதங்களில் பாதிக்கும். ஒன்று, ‘கேட்டராக்ட்’ (cataract) எனப்படும் கண்புரை.  அடுத்தது ‘டயாபட்டிக் ரெட்டினோபதி’ (diabetic retinopathy) எனப்படும் பாதிப்பு. இதில் கண்களின் விழித்திரை பாதிப்புக்குள்ளாகும். ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தாமல் அலட்சியம் செய்தால், ஒரு கட்டத்தில் கண் பார்வையை இழக்க நேரிடலாம். கேட்டராக்ட் எனப்படும் கண்புரை பாதிப்பு வந்தால், அதைச் சரிசெய்துவிடலாம். அதற்கு இன்று நிறைய நவீன சிகிச்சைகள், லேட்டஸ்ட் அறுவை சிகிச்சைகள் இருக்கின்றன.

பார்வை நரம்பு பாதிக்கப்பட்டால் அது மருத்துவர்களுக்கே சற்று சிரமமானதாகத்தான் இருக்கும். நீரிழிவு பாதிப்பின் காரணமாக ரத்தக்குழாய்களில் ரத்தக் கசிவு ஏற்படும். இதற்கு ‘விட்ரியஸ் ஹெமரேஜ்’ (Vitreous hemorrhage) என்று பெயர். இதை கவனிக்காமல் விட்டால் விழித்திரையே தகர்ந்துபோகும் அளவுக்கு ரிஸ்க் ஏற்படும். இது சற்று சீரியஸான பிரச்னை. எனவே, நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள், 6 மாதங்களுக்கு ஒரு முறை கண் மருத்துவரை அணுகி, கண்களைப் பரிசோதித்துக்கொள்ள வேண்டியது அவசியம். கண்புரை பாதிப்பு மட்டும்தான் இருக்கிறது என்றால் அதற்கான அறுவை சிகிச்சையைச் செய்து பார்வையை மீட்கலாம்.

diabetic retinopathy

நரம்புகள் பாதிக்கப்பட்டிருந்தால் பிரத்யேக டெஸ்ட்டுகள் செய்ய வேண்டியிருக்கும். ‘ஆப்டிகல் கோஹெரென்ஸ் டோமோகிராஃபி’ (Optical coherence tomography) எனப்படும் டெஸ்ட் செய்ய வேண்டியிருக்கும். அதன் பிறகு ‘ஃப்ளோரோசீன் ஃபண்டஸ்   ஆஞ்சியோகிராபி’ (Fluorescein fundus angiography). இதில் கை வழியே டை போன்ற திரவத்தைச் செலுத்தி, உள்ளே எங்கெல்லாம் ரத்தக் கசிவு இருக்கிறது என்று பார்ப்பார்கள். அதன் பிறகு லேசர் அல்லது பிரத்யேக இன்ஜெக்ஷன் மூலம் சிகிச்சை அளிக்கப்படும்.  இவற்றை எல்லாம் மீறி, விழித்திரை தகர்ந்துவிட்டால், ரெட்டினல் டிடாச்மென்ட் சர்ஜரி செய்ய வேண்டியிருக்கும். எனவே, ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதுதான் எல்லாவற்றுக்கும் அடிப்படை. தினமும் நடைப்பயிற்சி செய்யுங்கள். ஸ்ட்ரெஸ் அளவை கட்டுக்குள் வைத்திருங்கள். உணவுக்கட்டுப்பாடு முக்கியம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.