Thangamayil: வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்ய தங்க மயில் நிறுவனத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ரோபோ

மதுரையில் நகை விற்பனை நிறுவனத்தில் முதன்முறையாக வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்ய தங்கமயில் நிறுவனத்தில் ரோபோ அறிமுகம் செய்யப்பட்டது இந்நிகழ்வில் தங்கமயில் இணை நிர்வாக இயக்குனர் பா. ரமேஷ் அவர்கள் ரோபோ சேவையை துவக்கி வைத்தார்.

மதுரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தங்கமயில் நிறுவனம் தமிழகத்தில் 59 கிளைகளைக் கொண்டு செயல்பட்டு வருகிறது. தங்கமயில் ஜுவல்லரி, வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. கடந்த மாதம் புது முயற்சியாக நேதாஜி ரோடு தங்கமயில் கிளை இரவு 11 மணி வரை விற்பனை நடைபெறும் என்று அறிவித்தது. அதனைத் தொடர்ந்து இந்த மாதம் வாடிக்கையாளர் சேவையில் மேலும் ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.

தங்கமயில் ஜுவல்லரி

மதுரையில் நகை விற்பனை நிறுவனத்தில் முதன்முறையாக வாடிக்கையாளர்களுக்கு ரோபோ (ROBOT) மூலம் சேவை செய்யும் முறையை தங்கமயில் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. வாடிக்கையாளர்கள் இருக்கும் இடத்திற்கு தானாக வந்து தண்ணீர் மற்றும் இனிப்பை வழங்கி வருகிறது. இது வாடிக்கையாளர்களுக்கு புதுவித அனுபவத்தையும் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியையும் வழங்கி வருகிறது. இந்நிகழ்வை தங்கமயில் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநர் திரு. பா. ரமேஷ் அவர்கள் அவர்கள் ரோபோ சேவையை துவக்கி வைத்தார். உடன் பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.