‘கலைஞரை வாதத்தில் வென்ற உதயநிதி’ – வைரமுத்து பகிர்ந்த வாழ்த்து!

திமுக இளைஞரணித் தலைவரும் தமிழகத்தின் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் இன்று பிறந்தநாள் கொண்டாடுகிறார்.

கட்சித் தொண்டர்கள் பிறந்தநாள் விழாக்களைக் கொண்டாடிவரும் நிலையில், அரசியல் தலைவர்களும் அவருக்கு வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளனர். அந்த வகையில் கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தள பக்கத்தில் கவிதை வடிவில் வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார்.

வைரமுத்துவின் வாழ்த்து

ஒருநாள்

கலைஞரும் நானும்

கோபாலபுரத்தில்

உரையாடிக்கொண்டிருந்தோம்

உதயநிதி தன் மனைவி

கிருத்திகாவோடு வந்தார்;

நின்றுகொண்டே பேசினார்

கலைஞர் மறுத்த ஒருகருத்தை

தன் வாதத்தை முன்னிறுத்திச்

சாதித்துச் சென்றார்

அப்போதே

தெரிந்துகொண்டேன்

வலிவும் தெளிவும் மிக்க

வல்லவர் இவரென்று

உதயநிதி

பேரீச்சம் பழம்போல்

மென்மையானவர்; ஆனால்

அதன் விதையைப்போல்

உறுதியானவர்

சின்னச் சின்ன எதிர்ப்புகள்

இவரைச் சிதைப்பதில்லை

குன்றிமணி முட்டிக்

குன்றுகள் சாய்வதில்லை

காலம் இவரை

மேலும் மேலும்

செதுக்கும்; புதுக்கும்

“தம்பீ வா

தலைமையேற்க வா”

அண்ணாவிடம் கடன்வாங்கி

அண்ணன் வாழ்த்துகிறேன்